ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

வியாசர்பாடி அருள்வாக்கு சொல்கிறவர் சிறுமியின் உடலில் வீபூதி தடவி கற்பழித்து பின் பலருக்கு சிறுமியை விற்றார்

சிறுமியை கற்பழித்து நண்பர்களுக்கு விருந்தாக்கினாரா?: வியாசர்பாடி
ஜோதிடரை காவலில் விசாரிக்க முடிவு" அவரா அப்படி... நம்ப முடியவில்லையே.... இதுதான் வியாசர்பாடி பி.வி.காலனி முழுக்க இன்றைய பேச்சு. பி.வி.காலனி 24–வது தெருவில் தனம் ஜோதிட நிலையம் என்ற பெயர் பலகையுடன் காட்சி தரும் அந்த ஜோதிட நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது. ஜோதிடம் பார்க்க வந்த ஒரு சில பெண்களும் விசயத்தை கேள்விப்பட்டு தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார்கள். கடந்த 15 ஆண்டுகளாக இந்த பகுதியில் ஜோதிடம் பார்ப்பது, குறி சொல்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் அறவாளிசித்தர் பொது மக்களிடம் நல்ல பெயரையும் பெற்றார். அறவாளி சித்தர் சொன்னால் பலிக்குது.... அவர் சொல்லும் பரிகாரங்களை செய்தால் கஷ்டமெல்லாம் விலகி போகிறது... என்று பலர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அவர் தனக்கு இப்படி ஒரு இடி விழும் என்று அவரது ஜாதகத்தில் கூட கணிக்கவில்லையோ என்னவோ...?
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாங்காய் வியாபாரம் செய்த 14 வயது சிறுமி ரம்பா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தினமும் இரவில் பக்தர்கள் வரிசையில் அமர்ந்து தூங்கியதை பார்த்து சிலர் சந்தேகப்பட்டனர். உடனே ரம்பாவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்த போது ரம்பா கூறிய தகவல் போலீசுக்கு பேரதிர்ச்சியை அளித்தது. கண்ணீர் மல்க அந்த சிறுமி கூறியதாவது:–

எனது தாயார் பெயர் திருமலர். தந்தை இறந்து விட்டார். நாங்கள் வியாசர்பாடி பி.வி.கோவில் 1–வது தெருவில் வசித்து வந்தோம். எனக்கு படிப்பு சரியாக வரவில்லை என்று எனது அம்மா அறவாளி சித்தரிடம் அழைத்து சென்றார். அவர் எனக்கு விசேஷ இரவு பூஜை செய்ய வேண்டும் என்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒருநாள் நடு இரவு பூஜை செய்வதாக கூறி, தனி அறையில் என் ஆடைகளை கழற்றி உடலில் விபூதியை தடவி, தீர்த்தம் கொடுத்தார். நான் மயங்கி விழுந்ததும், என்னை அவர் கற்பழித்து விட்டார்.

இந்த கொடூர சம்பவம் நடந்த போது, என் அம்மா வீட்டுக்கு வெளியில் காத்திருந்தார். நான் அழுது கொண்டே வெளியில் வந்து, நடந்த சம்பவத்தை என் அம்மாவிடம் கூறினேன். அதற்கு அவர், ‘சித்தர் எது செய்தாலும், நமக்கு நன்மை தான் செய்வார்’ என்று அறிவுரை கூறினார். இதன் பின்னர், அடிக்கடி என்னை அறவாளி சித்தரிடம் என் அம்மா அழைத்துச் சென்றுவிடுவார். அவரும் என்னை அடித்து மிரட்டி பல முறை கற்பழித்தார். பின்னர் அவர் என்னை செல்வம் என்பவரிடம் ஒப்படைத்தார். செல்வம் குடிபோதையில் என்னை பலமுறை கற்பழித்தார். போதை ஊசி போட்டனர் பின்னர் செல்வம், அவரது மனைவி ஜெயா, அவரது தோழி லதா ஆகியோர் என்னை வைத்து விபசாரம் செய்ய தொடங்கினார்கள்.

நான் சுயநினைவில் இருக்கும் போது, விபசாரத்துக்கு செல்ல மறுத்தேன். போதை ஊசியை போடுவார்கள். சில நேரம் போதை மாத்திரை கொடுத்தனர். நான் போதையில் இருக்கும் போது, பலருக்கு என்னை விருந்தாக்கினார்கள். ஒருமுறை செல்வம், தன் நண்பர்கள் 6 பேருடன் குடிபோதையில் என்னை மெரினா கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். நடு இரவில் கடல் அலை அடிக்கும் இடத்துக்கு தூக்கிச் சென்று 6 பேரும் குடிபோதை வெறியில் விடியும் வரை என்னை கற்பழித்தார்கள்.

இதுபோல் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வரும் வெளியூர் நபர்கள் பலருக்கு என்னை இந்த கும்பல் விருந்தாக்கினார்கள். தினமும் குறைந்தது 10 பேருடன் என்னை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்திய, இந்த கும்பல் பெரும் தொகையை சம்பாத்தியம் செய்தது. இதில் சிறு தொகையை என் அம்மா திருமலருக்கு கொடுத்தது. எனக்கு நடந்த கொடுமையை என் அம்மாவிடம் கூறினேன். ஆனால், அவர் என் நிலையை புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை.

கடந்த மாதம் செல்வம், வீட்டில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.  நான் ஓசைப்படாமல் எழுந்து, செல்வம் சட்டைப்பையில் இருந்து 300 ரூபாயை எடுத்துக் கொண்டு, ரெயில் மூலம் திருப்பதி சென்றேன். கீழ் திருப்பதி வந்து கையில் வைத்திருந்த ரூபாய் மூலம் மாங்காய் வாங்கி, அதை துண்டு துண்டாக வெட்டி, திருப்பதி கோவில் வளாகத்தில் வியாபாரம் செய்தேன்.

ரம்பாவின் கண்ணீர் கதையை கேட்ட போலீசார் ‘சைல்டு ஹெல்ப்லைன்’ மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சி.பி.சி.ஐ.டி. விபாசார தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். டி.எஸ்.பி.ராஜா சீனிவாசன் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து உடனடியாக விசாரணை தொடங்கியது. அறவாளி சித்தர், ரம்பாவை விபசாரத்தில் தள்ள உறுதுணையாக இருந்த தாய் திருமலர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரும் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் இருக்கும் அறவாளி சித்தரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். ரம்பாவின் கூற்றுப்படி நடந்தது என்ன? அவளை சூறையாடியவர்கள் யார்? யார்? அறவாளி சித்தரின் பின்னணி, அவரது வலையில் வேறு பெண்கள் சிக்கி சீரழிந்து இருக்கிறார்களா? என்பது பற்றி போலீசார் தோண்டி துருவி வருகிறார்கள். தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ரம்பா குறிப்பிட்ட லதா, ஜெயா, செல்வம், குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கடற்கரையில் வைத்து 6 பேர் கற்பழித்ததாகவும் அவர்களை அடையாளம் காட்ட முடியும் என்றும் ரம்பா குறிப்பிட்டுள்ளார். அவர் கூறிய அடையாளங்களை வைத்து அந்த 6 காமுகர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக