ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

மயக்க ஸ்பிரே அடித்து ரயிலில் பெண்ணிடம் நகை திருட்டு

திண்டுக்கல்: தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் முனியாண்டி (61). ஓய்வு பெற்ற இன்ஜினியர். புனேயில் இருந்து மனைவி  கலைச்செல்வியுடன் மும்பை&நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்சில் மதுரை புறப்பட்டனர். ஏசி பெட்டியில் மிடில் படுக்கை ஒதுக்கப்பட்டிருந்ததால், கீழ் படுக்கையில் பயணித்தவரிடம் முனியாண்டி இருக்கையை மாற்றிக்கொண்டார்.கீழ் இருக்கையில் இருந்த மர்ம நபர் மிடில் பெர்த்தில் படுத்துக்கொண்டார். ரயில் நேற்றுமுன்தினம் சேலம் வந்தபோது அசைவின்றி தூங்கிய கலைச்செல்வி மீது சந்தேகமடைந்த முனியாண்டி அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றார். ஆனால், அவர் மயக்க நிலையிலேயே இருந்தார். அதற்குள் அந்த மர்ம நபர் தலைமறைவாகி இருந்தார். கலைச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை. ரயில் திண்டுக்கல்லுக்கு வந்ததும் போலீசாரிடம் முனியாண்டி புகார் செய்தார். அதில், மயக்க ஸ்பிரே அடித்து நகை திருடப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக