ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

பாதாள சாக்கடையில் இறங்கியபோது விஷ வாயு தாக்கி 3 பேர் பலி - இதுக்கு இன்னும் இயந்திரம் கண்டு பிடிக்கலையாம் ? ஆனால் செவ்வாய்க்கு போகபோகிறார்கள் ? கொடுமை!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


தர்மபுரி:நள்ளிரவில் பாதாள சாக்கடையில் அடைப்பை சரி செய்வதற்காக இறங்கிய 3 பேர் விஷ வாயு தாக்கி பரிதாபமாக இறந்தனர்.
தர்மபுரி நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. 90 சதவீத பணிகள் முடிந்து, பெரும்பாலான வீடுகள் மற்றும் கடைகளுக்கு  இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் பஸ் நிலையம் அருகே 4 ரோடு பெட்ரோல் பங்க் எதிரில் பாதாள சாக்கடையில்  அடைப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் குருசாமிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து  சூப்பர்வைசர் லட்சுமணன் (28)  தலைமையில் தொழிலாளர்கள் கம்ப்ரசர் வாகனத்துடன் அங்கு சென்றனர். தொழிலாளர்கள் மாதேஸ் (30), ராஜா (40) இருவரும் சாக்கடைக்குள் இறங்கி  சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த லட்சுமணன், சாக்கடைக்குள் இறங்கி  பார்த்தார். அவரும் வெளியே வரவில்லை.


வெளியே நின்றிருந்தவர்கள் டார்ச் லைட்டை அடித்து பார்த்தனர். இருட்டில் எதுவும் தெரியவில்லை. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல்  தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கவச உடை அணிந்தபடி குழிக்குள் இறங்கி தேடினர். அங்கு லட்சுமணன் உள்பட 3 பேரும் இறந்து  கிடந்தது தெரிந்தது. அவர்கள் விஷ வாயு தாக்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 3 பேர் உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே  எடுத்து வந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி ஜி.ஹெச்.க்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி விரிவான விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி. ஆஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், கலெக்டர்  விவேகானந்தன், டிஆர்ஓ ராமர், எம்எல்ஏ அன்பழகன், ஆர்டிஓ மேகனா மற்றும் அதிகாரிகள் இன்று காலை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று  பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். விஷ வாயு தாக்கி 3 பேர் பலியான சம்பவம், தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=47644#sthash.n2w1Nwrv.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக