ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

Hollywood நோக்கி bollywood நடிகைகள் !

ஜேம்ஸ் வான் இயக்கும் Fast & Furious 7 திரைப்படக் குழுவும் இந்த முயற்சியில் தான் இறங்கியிருக்கிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, கங்னா ரனாவத், சித்ரங்டா சிங் ஆகிய மூவரில் ஒருவரை Fast & Furious  7-வது பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஆடிஷன் நடத்தி வருகிறார்களாம். பெரும்பாலும் ஆக்‌ஷன் காட்சிகளிலும் அடித்து தூள் கிளப்பும் தீபிகா படுகோனே தான் இறுதியில் செலக்ட் ஆவார் என்கிறது பாலிவுட் திரையுலகம். Furious 6-ஆம் பாகம் இந்தியாவில் வெளியாகி பெரும் வசூலை அள்ளிக் குவித்தது குறிப்பிடத்தக்கது. அதிக ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யாராய் நடிக்காததும், இந்தியாவுடம் தொடர்புள்ள ஹாலிவுட் கதைகளில் அதிகமாக நடித்துள்ள பூஜா குமார் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் பிஸியானதும் தான் தீபிகா படுகோனே, கங்னா ரனாவத் ஆகியோருக்கு ஹாலிவுட்டில் வழிவிட்டிருக்கிறதாம்.

சோனம் கபூர் 'The Pirates Of the Caribbean :Dead Man Tells No Tales' திரைப்படத்திற்காக ஆடிஷன் சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.  R சர்டிஃபிகேட்டுடன் வெளியாகி இந்தியாவில் கடந்த 4 வாரங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'The Conjuring' என்ற பேய்ப் படத்தின் இயக்குனர் தான் ஜேம்ஸ் வான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் திரையுலகம் இந்திய திரையுலகிற்கு எட்டாக்கனியாகவே இருந்துவந்தாலும், தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியினால் பல இந்திய திரையுலக கலைஞர்களும் ஹாலிவுட் கலைஞர்களுக்கு நிகராக தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டுவருகின்றனர்.

ஹாலிவுட் திரையுலகினர் பலரையும் பிரம்மிக்க வைக்கக் கூடிய திரைப்படங்கள் அவ்வப்போது வெளிவருவதால் ஹாலிவுட்டிற்கு நிகரான திரைப்படம் இந்திய திரையுலகில் எடுப்பதற்கு அதிக தூரம் இல்லை என்பது தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக