ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

துணிந்து 60 வயது பெண்ணை மணந்த 80 வயதுகாரர் ! வாழ்க

பரமத்திவேலூர் அருகே 60 வயது பெண்ணை மணந்த 80 வயது முதியவர் ;மோகனூர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த குப்புச்சிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 80). (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) மனைவியை இழந்த இவர் வெற்றிலை கொடிக்கால் தொழில் செய்து வருகிறார். இவருக்கு வயதானதால் சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்ய ஒரு வயதான பெண் தேவை என பரமத்திவேலூரை சேர்ந்த ஒரு பெண் பார்க்கும் புரோக்கரிடம் கூறியுள்ளார். புரோக்கரும் அவருக்கு ஏற்ற வகையில் ஒரு பெண் தேடி வந்துள்ளார்.
இந்நிலையில், பரமத்திவேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பெண் பார்க்கும் புரோக்கர்கள் தினமும் பரமத்திவேலூரில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோயில் அருகே சந்தித்து, ஒருவருக்கொருவர் தங்களிடம் உள்ள ஜாதகத்தை மாற்றிக்கொண்டு பெண் பார்த்து வருவது வழக்கம். அப்படி ஒரு நாள் இரண்டு புரோக்கர்கள் சந்தித்துக்கொண்டபோது, கணவனை இழந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் மணமகன் தேவை என ஒரு புரோக்கர் கூறியுள்ளார்.

இரண்டு புரோக்கர்களும் தங்களிடம் உள்ள அவர்கள் பற்றிய தகவல்களை பரிமாரிக்கொண்டனர். இரண்டு பெண் பார்க்கும் புரோக்கர்களும் அவர்கள் இருவரையும் சந்தித்து அவர்களை பற்றி எடுத்து கூறியுள்ளனர். மணமகனையும், மணமகளையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இருவருக்கும் கருத்து ஒற்றுமை ஏற்பட்டதால், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன் பரமத்திவேலூரில் இருந்து கரூர் செல்லும் ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில், புரோக்கர்கள் முன்னிலையில் இருவரும் மாலை மட்டும் மாற்றிக்கொண்டு புதிய தம்பதிகளாயினர். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து கணவனை இழந்ததால் தாலிக்கட்டி கொள்ளவில்லை. தற்போது, இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர் என்ற செய்தியறிந்து, அங்கு சென்று புதிய தம்பதியினரை சந்தித்தபோது, இருவரும் தங்களது பெயரை கூறவும், புகைப்படம் எடுக்கவும் மறுப்பு தெரிவித்தனர்.
இது குறித்து ராமசாமியிடம் விசாரித்த போது, தனக்கும் தனது மனைவிக்கும் மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகள் இருப்பதாகவும், வயதானதால் சமையல் செய்யவும் வீட்டு வேலைகளை கவனிக்கவும், பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லாததாலும், தனிமை வாழ்க்கை மிகவும் கொடுமையானது என்பதாலும், பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் சம்மதத்துடன் தான் எங்கள் திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் கொடிக்கால் வேலைக்கு சென்று நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம் என்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக