ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

SRM பச்சமுத்து: வேந்தர் மூவீசுக்கும் எனக்கும் தொடர்பில்லையே ? அப்புறம் ? இன்னா பாரி வேந்தரே ?

 வேந்தர் மூவீஸுடன் எனக்கு தொடர்பே இல்ல! - சொல்கிறார் பச்சமுத்து சென்னை: விஜய் நடித்த தலைவா படத்துடனோ, அதை வெளியிடும் வேந்தர் மூவீஸுடனோ எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை, என்று கூறியுள்ளார் எஸ்ஆர்எம் குழுமத்தின் டி ஆர் பச்சமுத்து. தலைவா படத்தை வேந்தர் மூவீஸ் வெளியிடுகிறது. இந்த வேந்தர் மூவீஸ் பச்சமுத்துவுக்கு சொந்தமானது என்று திரையுலகில் கூறப்படுகிறது. பச்சமுத்து இப்போது தனக்கு வைத்துக் கொண்டுள்ள பெயர் பாரிவேந்தர் என்பதாகும். வேந்தர் டிவி, வேந்தர் மூவீஸ் என்பதெல்லாம் அவர் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்களே என்று கூறிவந்த நிலையில், சில தினங்களுக்கு முன் தில்லு முல்லு படம் வெளியானபோது வேந்தர் மூவீஸில் வருமான வரி சோதனை நடந்தது. அப்போது வேந்தர் மூவீசுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிக்கை விட்டார் பச்சமுத்து. இப்போது தலைவா பட விவகாரத்தில் பச்சமுத்துவின் பெயரும் அடிபடுகிறது. படத்தை வெளியிட சில அரசியல் தலைவர்கள், ஒரு மூத்த அமைச்சர் ஆகியோரை பச்சமுத்து அணுகினார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை மறுத்து நேற்று அறிக்கைவிட்டுள்ளார் பச்சமுத்து. அதில், "தலைவா படத்துக்கு எதிராக கடிதம் அனுப்பியதாகக் கூறப்படும் புரட்சிர மாணவர் படையினர் அந்தக் கடிதத்தில் என் பெயரைக் குறிப்பிட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது. தலைவா படத்துடனோ, அதனை வாங்கி வெளியிடும் வேந்தர் மூவீசுடனோ எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இவற்றுடன் என்னைச் சம்பந்தப்படுத்த வேண்டாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக