ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

உத்தரகாண்ட் வெள்ளதில் 300 வெளிநாட்டுக்காரர்களை காணவில்லை ! இறந்திருக்கலாம் !

டேராடூன்: உத்தரகாண்டில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழை
மாநிலத்தை புரட்டி போட் டது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பல பகுதிகள் உருக்குலைந்தன. பத்ரிநாத், கேதார்நாத், உத்தரகாசி போன்ற பகுதிகளுக்கு யாத்திரை சென்ற ஏராளமான பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். அந்த பகுதிகளில் வசித்த ஏராளமான மக்கள் வீடுகளை இழந்தனராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.ர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தவித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய பகுதிகளில் மீட்கப்பட்ட சடலங்கள் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டதால் டிஎன்ஏ பரிசோதனை மூலமாக அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து அதன் தலைவர் அஜய் பிரத்யோக் கூறுகையில், வெள்ளம் மற்றும் பேரிடர் நிவாரண துறையினர் தொடர்ந்து உத்தரகண்டில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ருத்ர பிரயாகை, சமோலி, உத்தரகாசி ஆகிய பகுதிகளில் சிக்கியவர்கள் குறித்தும், மாயமானவர்கள் குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி இந்த பகுதியில் பயணம் மேற்கொண்டிருந்த 300 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நிலை என்ன ஆனது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர்கள் பேரழிவில் சிக்கி உயிரிழந்தார்களா என்பது குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை. வெளிநாட்டு பயணிகளில் நேபாளம், அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் அடங்குவர். மொத்தமாக 5,100 பேர் மாயமாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக