சனி, 24 ஆகஸ்ட், 2013

இந்தியா - சீன ராணுவ வீரர்கள் கூட்டுப் பயிற்சி:5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் துவக்கம்

புதுடில்லி:இந்தியா- சீனா இருநாட்டு ராணுவ வீரர்களின் கூட்டுப்பயிற்சி 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் துவங்கப்படுகிறது.இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்திருக்கும் அதே வேளையில்,பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சி வரும் நவம்பர் மாதம் 4-ம் தேதியில் இருந்து 14-ம் தேதி வரை சீனாவில் உள்ள செங்டு மாகாணத்தில் நடைபெறவுள்ளது. கூட்டுப்பயிற்சி துவக்கம்:இந்தியா - சீனாவுக்கிடையிலான ராணுவ கூட்டுப் பயிற்சிக்கு 2007-ம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டது.இதனையொட்டி, 2007-ம் ஆண்டு சீனாவிலும் தொடர்ந்து 2008-ம் ஆண்டு இந்தியாவின் முறையாக கர்நாடக மாநிலம் பெல்லாரியிலும் இருநாட்டு ராணுவ வீரர்கள் பங்கேற்ற கூட்டுப் பயிற்சி நடைபெற்றது.
2010ல் ‌இந்தியா தடை:2010-ம் ஆண்டு இந்திய ராணுவ (வடக்கு) கமாண்டர், லெப்டிணன்ட் ஜெனரல் பி.எஸ். ஜஸ்வாலுக்கு விசா வழங்க சீனா மறுத்து விட்டது.இதனைத் தொடர்ந்து, சீனாவுடனான கூட்டுப் பயிற்சிக்கு இந்திய அரசு தடை விதித்தது.



அமைச்சர்கள் பேச்சுவார்த்தை:கடந்த (2012) ஆண்டு சீனா சென்றிருந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி, சீன ராணுவ அமைச்சர் லியாங் குவாங்லீ-யும் நடத்திய பேச்சு வார்தையின் போது இரு நாடுகளும் மீண்டும் ஒன்றிணைந்து தரைப்படை, கப்பற்படை, விமானப்படை வீரர்களுக்கான கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.அதன் அடிப்படையில், 5 ஆண்டுகளாக தடைபட்டிருந்த ராணுவ கூட்டுப்பயிற்சி நவம்பர் 4-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சீனாவின் செங்டு மாகாணத்தில் நடக்கவுள்ளது.

ஐ.நா. சபையின் வழிகாட்டி நெறிகளுக்கு உட்பட்டு, இரு நாட்டு ராணுவ வீரர்களும் ஒத்திகை பயிற்சி செய்வார்கள்.சீனா அவ்வப்போது எல்லை மீறல் பிரச்சினையை கொண்டுவந்து தொல்லை ஒரு புறம் அரசியல் ரீதியாக சுமூக பேச்சுவார்த்தை நடத்தி இது போன்ற கூட்டுப்பயிற்சி ஏற்பாடும் நடக்கிறது. இருந்தாலும் சீனாவிடம் ‌எச்சரிக்கையுடன் இருப்பதே இந்தியாவிற்கு நல்லதுdinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக