சனி, 24 ஆகஸ்ட், 2013

தினமலருக்கு அரசு விளம்பரம் NO ! அமைச்சர்களின் ஆழ்ந்த உறக்கமும் அம்மாவின் முழக்கமும் காரணமா ?

சென்னை:"முதல்வர் உரை நிகழ்த்திய போது, அமைச்சர்கள் எல்லாம் தூங்கி வழிந்து கொண்டிருந்த புகைப்படத்தை, முதல் பக்கத்தில் வெளியிட்ட காரணத்தாலோ என்னவோ, "தினமலர்' நாளிதழுக்கு, இரண்டு பக்க அரசு
விளம்பரங்கள் தரப்படவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.கருணாநிதி வழக்கமாக வெளியிடும், கேள்வி - பதில் அறிக்கை:
சென்னை பல்கலைக் கழகத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய பட்டமளிப்பு விழா உரையின் போது, எடுக்கப்பட்ட புகைப்படம், "தினமலர்' நாளேட்டில் முதல் பக்கத்தில் வெளி வந்ததைப் பார்த்தீர்களா?
பார்த்தேன்; அதை அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தானே, "தினமலர்' முதல் பக்கத்திலேயே மிகப் பெரியதாக வெளியிட்டிருந்தது. முதல்வரின் பேச்சை, அமைச்சர்கள் எல்லாம் அவ்வளவு ஆர்வமாகக்(?) கேட்கின்றனர் என்று, கிண்டலாக அதை அந்த இதழ் வெளியிட்டிருக்கிறது. அதைக்கூட, "முதல்வரின், "தாலாட்டு'ப் பேச்சில் அமைச்சர்கள் அயர்ந்து தூங்குகின்றனர்' என்று குறிப்பு எழுதியிருந்தது தான் கொடுமை! தூங்கு மூஞ்சி மங்குனி அமைச்சர்கள் படத்தை தினமலர் வெளியிட்டதால் அரசு விளம்பரம் தரவில்லையா? அல்லது விளம்பரம் தராத கோபத்தில் மலர் தூங்கும் படத்தை முதல் பக்கத்தில் வெளியிட்டதா? இதுதான் கலைஞரின் கேள்வி. இதில் உள்ள உள்ளார்த்தைப் புரிந்துகொள்ளாமல் அம்மாவின் அடிவருடிகள்சாமியாட்டம் ஆடி இருக்கின்றன. எங்கே தினமலர் நமக்கு எதிராக இவ்வாறு தொடர்ந்து உன்மையின் உரைகல்லாத மாறி விடப்போகிறோதோ என்ற அச்சம் ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் வெளின்பாடு இத்தனை காழ்ப்புணர்ச்சி


கடந்த, 21ம் தேதி மாலைப் பத்திரிகைகளிலும், 22ம் தேதி காலைப் பத்திரிகைகளிலும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியையும், திருவரங்கம் தேசிய சட்டப் பள்ளியையும் முதல்வர், காணொலி மூலம் திறந்து வைப்பதையொட்டி, இரண்டு முழுப் பக்க விளம்பரங்கள் தரப்பட்டுள்ளன.அதிலும் ஆங்கில் பத்திரிகைகளில் எல்லாம், முதல் பக்கத்திலேயே முழுப்பக்க விளம்பரங்கள் தரப்பட்டுள்ளன.முதல்வர் பேச்சின் போது, அமைச்சர்கள் எல்லாம் தூங்கி வழிந்து கொண்டிருந்த புகைப்படத்தை, முதல் பக்கத்தில் வெளியிட்ட காரணத்தாலோ என்னவோ, "தினமலர்' நாளிதழுக்கு இந்த, இரண்டு பக்க விளம்பரங்கள் தரப்படவில்லை போலும் அல்லது விளம்பரம் அந்த இதழுக்கு அரசினால், தரப்படாத காரணத்தால் தான், இத்தகைய புகைப்படங்களை, அந்த இதழ் தைரியமாக வெளியிடுகிறது போலும்!இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக