திங்கள், 5 ஆகஸ்ட், 2013

10 லட்சம் போலி டாக்டர்கள் ! நாடு முழுவதும் சிகிச்சை அளிக்கின்றனர்.

புதுடெல்லி:நாடு முழுவதும் நகரங்களில் சேவை செய்து வரும் டாக்டர்கள்
குறித்து ஐஎம்எஸ் ஹெல்த் என்ற தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில் பெரும்பாலான டாக்டர்கள் எம்பிபிஎஸ் படிக்காதவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட எம்பிபிஎஸ், எம்டி போன்ற மருத்துவ பட்டங்களை பெற்றவர்களே டாக்டர்களாக சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெரும்பாலான டாக்டர்கள் மருத்துவ பட்டம் பெறாமல் சிகிச்சை அளிக்கின்றனர். சித்தா, ஆயுர்வேதா படித்த பலர் டாக்டர் என்று போர்டு வைத்து கொண்டு அலோபதி மருந்துகளையும், ஊசிகளையும் நோயாளிகளுக்கு அளித்து வருகின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பெரிய மற்றும் நடுத்தர அளவிலான 120 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இடப்பற்றாகுறை, சுகாதாரம் இல்லாதது என பல்வேறு குறைகளுடன் அங்கீகாரம் இன்றி பலர் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், இவர்கள் கன்சல்டிங் கட்டணமாக குறைந்த தொகையே வசூலிக்கின்றனர். அவர்களின் கல்வி தகுதி குறைவாக இருப்பதே இதற்கு காரணம். ஆனால், உண்மையில் மருத்துவம் படித்த நிபுணர்கள் கன்சல்டிங் கட்டணமாக அதிக தொகை வசூலிக்கின்றனர்.

நாடு முழுவதும் கிராமம் மற்றும் நகரங்களில் சுமார் 10 லட்சம் போலி டாக்டர்கள் இதுபோல் ஆங்கில மருந்துகளை அங்கீகாரமின்றி வழங்கி வருகின்றனர். அவற்றில் 4 லட்சம் பேர் மட்டுமே இந்திய மருத்துவம் எனப்படும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்றவற்றை முறையாக படித்தவர்கள் என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது .tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக