திங்கள், 5 ஆகஸ்ட், 2013

ADMK பாசறை கூட்டத்தில் சீருடையுடன் பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை: கல்வித் துறை அமைச்சர் பங்கேற்ற, அ.தி.மு.க., பாசறை
ஆலோசனை கூட்டத்தில், அரசு பள்ளி மாணவ, மாணவியரை அழைத்து வந்து பங்கேற்க செய்த சம்பவம், பெற்றோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டையில், அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் ஆலோசனைக் கூட்டம், நேற்று நடந்தது. இதற்காக, நகர்மன்ற வளாகத்தில், பிரம்மாண்டமான பந்தல் போடப்பட்டுஇருந்தது. கூட்டத்துக்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வைகைச் செல்வன் தலைமை தாங்கியதால், புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர், சீருடையுடன் வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர். காலை, 9:00 மணி முதல் பிற்பகல், 2:00 மணி வரை கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு, கோழி பிரியாணி, தண்ணீர் பாக்கெட் மற்றும் டீ ஷர்ட் வழங்கப்பட்டன. அரசியல் கட்சி கூட்டத்தில், மாணவர்களை பங்கேற்க செய்த சம்பவம், பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடம், இதுகுறித்து, விளக்கம் கேட்க, பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக