திங்கள், 29 ஜூலை, 2013

நயன்தாராவுக்கு ஒவ்வாமை காரணமாக ஒய்வு ! அலர்ஜி ஷூடிங்க்ஸ் கான்சல் !

நடிகை நயன்தாராவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு
இணைய தளங்களில் செய்திகள் பரவியுள்ளது. தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருந்த அவர் பிரபு தேவாவுடன் காதல் வயப்பட்டதும், படங்களில் நடிப்பதை நிறுத்தினார். கடைசியாக தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் நடித்து கண்ணீரோடு விடைபெற்றார். ஆனால் காதலில் முறிவு ஏற்பட்டதால் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். அஜீத், ஆர்யா ஜோடியாக தமிழில் இரு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில்தான் அவர் உடல்நிலை குறித்து கிசு கிசுக்கள் பரவியுள்ளன. தொடர்ந்து மேக்கப் போட்டதால் தோலில் அலர்ஜி ஏற்பட்டதாகவும், இதற்காக அவர் கேரள ஆயுர்வேத சிகிச்சை மற்றும் ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொள்வதாகவும் தெலுங்கு இணைய தளத்தில் செய்தி வந்துள்ளது. இதற்காக படப்பிடிப்பையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக