திங்கள், 29 ஜூலை, 2013

ஜாமீன் :சிறுவன் மீது போதையில் கார் மோதி பலியான வழக்கில் தொழிலதிபர் புருஷோத்தமனின் மகன் ஷாஜிக்கு

சென்னை:  எழும்பூரில் சாலையோரம் படுத்திருந்த சிறுவன் மீது கார் மோதி பலியான வழக்கில் தொழிலதிபர் புருஷோத்தமனின் மகன் ஷாஜிக்கு
சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. போதையில் காரை ஓட்டி சிறுவனை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் புருஷோத்தமன் மகன் ஷாஜியை போலீசார் கேரளாவில் கைது செய்தனர். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தொழிலதிபர் புருஷோத்தமனின் மகன் ஷாஜிக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பு அளித்தது dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக