திங்கள், 29 ஜூலை, 2013

திருவனந்தபுரத்தில் ஓடும் ரெயிலில் கற்பழிக்க முயற்சி: ரெயில்வே அதிகாரி கைது

திருவனந்தபுரத்தில் ஓடும் ரெயிலில் நர்சிங் மாணவியை கற்பழிக்க முயற்சி: ரெயில்வே அதிகாரி கைதுதிருவனந்தபுரத்திற்கு நேற்று மாலை 3.45 மணியளவில் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.
அந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. ஒரு பெட்டியில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் தனியாக பணம் செய்தார். அந்த ரெயில் கோட்டயத்தை நெருங்கி கொண்டு இருந்தபோது, கொங்கன் ரெயில்வேயில் அதிகாரியாக பணிபுரியும் ராஜன் என்பவர் அந்த பெட்டிக்கு வந்தார்.
மாணவி தனியாக பயணம் செய்வதை பார்த்ததும் அவருக்கு விபரீத ஆசை ஏற்பட்டது. அந்த மாணவியை ராஜன் கற்பழிக்க முயன்றார். இதனால் பதறிப்போன அந்த நர்சிங் மாணவி, அவரிடமிருந்து தப்பிக்க போராடினார்.
பிறகு தன்னிடமிருந்த போன் மூலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் அந்த ரெயில் கோட்டாயம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு தயாராக நின்ற போலீசார் ராஜனை கைது செய்தனர்.
அதன் பிறகு அவரை காசர்கோடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் ராஜனிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் மீது ஏற்கனவே இதுபோல 2 வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. இதனால் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக