திங்கள், 22 ஜூலை, 2013

பாகிஸ்தானில் கடத்தப்பட்ட இந்து சிறுமி மீட்பு ! கடத்தல்காரர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்

Hindu girl rescued after gun battle with kidnappers in Karachi (© AP)
Karachi: A three-year-old Hindu girl in Pakistan was rescued by police here in an operation during which her four captors were killed. Mahi Suchdev, daughter of Sunil Sachdev was kidnapped last week and a ransom of Rs 5 crore was demanded by her kidnappers, police said.
"Mahi had been taken away on July 13 by the family's house servant Rano, from the doctors' mess in Walika Hospital where her father and mother both doctors worked," said Citizens-Police Liaison Committee (CPLC) chief Ahmed Chinoy and Anti-Violent Crime Cell (AVCC) head SSP Niaz Ahmed Khoso while addressing a joint press conference here yesterday.
The gun battle also left five policemen and one employee of the CPLC wounded, the police said. The family engaged the kidnappers in talks over the ransom amount which was scaled down to Rupees 600,000 and it was agreed that the ransom would be paid near Kashif Centre, the Dawn reported.
A police team was already deployed there when a kidnapper came to collect the money the police challenged him and in the ensuing encounter the suspect sustained a single bullet in his abdomen, while his accomplices managed to escape in the car.AP
பாகிஸ்தானில் கராச்சி பகுதியை சேர்ந்த சுனில் சச்தேவ் என்பவரது 3-வயது மகளான மகி சச்தேவ் கடந்த 13-ந்தேதி வீட்டு வேலைக்காரருடன் தனது பெற்றோர்கள் டாக்டர்களாக பணியாற்றும் ஆஸ்பத்திரிக்கு சென்றபோது மர்ம மனிதர்களால் கடத்த்தப்பட்டாள். பின்னர் இதுபற்றி கடத்தல் கோஷ்டியினர் பெற்றோரிடம் ரூ.5 கோடி கேட்டு போனில் மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதற்கிடையே போலீசாரின் ஆலோசனையின் பேரில் கடத்தல் கோஷ்டியிடம் ரூ.60 லட்சம் தர பெற்றோர் சம்மதம் தெரிவித்து, அதை அவர்கள் தெரிவித்த இடத்தில் வைத்து சென்றனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் கடத்தல் கோஷ்டியை நோக்கி சுட்டனர். கடத்தல் கோஷ்டியினரும் திருப்பி சுட்டனர். இதில் வயிற்றில் குண்டு காயம் அடைந்த ஒருவனை தவிர மற்றவர்கள் காரில் தப்பி சென்றனர். அவன் போலீசாரிடம் நீலம் காலனியில் சிறுமி மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்தான். சிறிது நேரத்தில் அவன் இறந்து விட்டான்.
இதைத்தொடர்ந்து நீலம் காலனி பகுதியில் போலீசார் அதிரடியாக சென்று குறிப்பிட்ட இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தி சிறுமியை மீட்டனர். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக