திங்கள், 22 ஜூலை, 2013

குஷ்பு தென்சென்னையில் போட்டி ? கலைஞர் அதிரடி! யாருக்கு கடிவாளம் ?

டெசோ.. தஞ்சாவூரில் தலைமை வகிக்கிறார் குஷ்பு- தென் சென்னை
தொகுதியில் போட்டி? சென்னை: திமுகவினால் ஓரங்கட்டப்பட்ட நடிகை குஷ்புவுக்கு விரைவில் கல்தா கொடுக்கப்படும் என்ற செய்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் டெசோ சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு நடிகை குஷ்பு தலைமை தாங்க இருக்கிறார் என்று திமுக அறிவித்துள்ளது. திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் நியமனத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து அடி வாங்கினார் குஷ்பு. அதன் பின்பு அவருக்கு திமுகவில் இறங்குமுகம்தான். திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் அவர் திமுகவை விட்டே விலக்கப்பட இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. தஞ்சாவூரில் தலைமை இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், இன்று திமுக தலைமையகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஆகஸ்ட் 8-ந் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் டெசோ ஆர்ப்பாட்டத்துக்கு நடிகை குஷ்பு தலைமை வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. தென்சென்னையில் போட்டி? அத்துடன் லோக்சபா தேர்தலில் குஷ்புவை தென் சென்னையில் போட்டியிடவும் வைக்க கருணாநிதி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு அவரது குடும்பத்தில் எழுந்தாலும் தனக்கென ஒதுக்கப்படும் சீட் கோட்டாவில் குஷ்புவை நிறுத்தப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறாராம் கருணாநிதி. ஆக தென்சென்னை திமுக வேட்பாளர் நடிகை குஷ்பு சுந்தர்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக