திங்கள், 22 ஜூலை, 2013

யாருக்கும் கேர்ள் பிரெண்­டாக நான் இருப்­பது கடினம் ! ஸ்ருதி ஹாசன்

சிறு­வ­யதில் தான் நடிகர் கமல்­ஹா­சனின் மகள் என்று வெளிப்­ப­டுத்­திக்­ கொள்ள விரும்­பாமல் எளி­மை­யாக  வாழ்ந்­த­தாக நடிகை ஸ்ருதி ஹாசன் கூறு­கிறார்.  அத்­துடன் சில­ரிடம் தான் கமல்­ஹா­சனின் மகள் அல்ல, டாக்டர் ராமச்­சந்திரன் என்­ப­வரின் மகள் எனக் கூறிக்­கொண்­ட­தா­கவும் அவர் செவ்­வி­யொன்றில் தெரி­வித்­துள்ளார்.
தனது  இள­மைக்­காலம், சித்தார்த், தனு­ஷு­ட­னான வதந்­திகள், தனது திரு­மண நம்­பிக்­கைகள் குறித்து ஸ்ருதி­ஹாசன் அளித்த சூடான செவ்வி இது:
கேள்வி :  கெம­ரா­வுக்கு முன்னால்   நிற்­கும்­போது   வெட்­கப்­ப­டா­தி­ருப்­ப­தற்கு   கற்­றுக்­கொள்­வ­தாக கூறு­கி­றீர்கள். கமல் ஹாசனின் மகள் என்ற வகையில் அது உங்­க­ளுக்கு பெரிய கஷ்­ட­மா­ன­தல்­ல­தானே?

ஆனால், அப்­பாவும்   அம்­மாவும் (நடிகை சரிகா) ஒரு­போதும் எனக்கு சாத­க­மாக எதையும் மாற்றி அமைக்­க­வில்லை. நான் எதையும் செய்ய விரும்­பினால் நானா­கவே செய்­து­கொள்ள வேண்டும் என்­பது போன்றே எப்­போதும் அவர்கள் இருந்­தார்கள்.
அப்­போ­துதான்  உங்கள் பயணம்  அர்த்­தபூர்வமாக இருக்கும். ஆம். அவர்கள் எனக்கு அருகில் இருந்­தார்­கள்தான். ஆனால் எதையும் நானே செய்தேன். தோல்­வி­களும் என்­னு­டை­யவை, வெற்­றி­களும் முற்றிலும் என்­னு­டை­யவை.
கேள்வி : கமல் ஹாசனின் மக­ளாக வளர்­வது எப்­ப­டி­யி­ருந்­தது?
எனது நண்­பி­க­ளுக்கு  அவரை  ஸ்ருதியின்   தந்தை அல்­லது  கமல் அங்கிள் என்­றுதான் தெரியும். இப்­போ­து­கூட  அவர்கள் “ஸ்ருதியின்  டாடியின் படம் வெளி­யா­கி­விட்­டது” எனக் கூறு­வார்கள். அந்­த­ள­வுக்கு எமது பாட­சாலைக் காலம் எளி­மை­யாக இருந்­தது. நாங்கள் பாட­சாலை  பஸ்­ஸிலும்  ஆட்­டோ­விலும் தான்  பாட­சா­லைக்கு செல்ல வேண்டும் என  எமது  தாயார் வலி­யு­றுத்­துவார். நாம்  சாதா­ரண பிள்ளைப் பரு­வத்­தையே கொண்­டி­ருந்தோம்.
உண்­மையில்  நான் வேறொ­ரு­வரின்  மகள் போன்று  காட்­டிக்­கொள்ள முயன்றேன். அவர்கள்  என்­னிடம்  “நீ கமல் ஹாசனின் மகள் எனக் கூறு­வார்கள். “இல்லை, நான் டாக்டர் ராமச்­சந்­தி­ரனின் மகள்” என நான் கூறுவேன்.
நான்  என்னை  பூஜா ராமச்­சந்­திரன்  எனக் கூறிக்­கொண்டேன். அவர் (கமல்) எனது  தந்தை என யாரும் அறிந்­து­கொள்­வதை நான் விரும்­ப­வில்லை. எனது தந்­தையின் பணிகள் குறித்து நான் பெரு­மை­ய­டை­கிறேன். ஆனால் அது எனது வழியில் தானாக வந்­தவை. உங்கள் அம்மா மிக அழகு என அனை­வரும் குறிப்­பாக தந்­தையின் நண்­ப­ர்கள் கூறு­வார்கள்.
ஆனால், அவர் (அம்மா) அமை­தி­யாக இருப்பார். மீன் கறி, இறால் கறி சமைத்து தனது நண்­பி­க­ளுக்கு பறி­மா­றுவார். வழக்­க­மான மேல்­தட்டு மத்­திய வர்க்க சூழ்­நி­லை­யி­லேயே நாம் வளர்ந்தோம்.

கேள்வி : உங்கள் தந்தை ஒரு சுப்பர் ஸ்டார் என நீங்கள் எப்­போது உணர்ந்­தீர்கள்?
அவரின் திரைப்­பட விழாக்­க­ளுக்கு நாம் போகும்­போ­துதான் அதை உணர்ந்தேன். அவரின் மீது வெறி­கொண்ட ரசி­கர்கள் பாய்­வார்கள். அப்­போது எனது தந்தை முற்­றிலும் வித்­தி­யா­ச­மா­ன­வ­ராக இருப்பார். ‘ஓ இது அவரின் மற்ற பக்கமோ” என நான் எண்­ணுவேன்.
கேள்வி : ஒரு  குழந்­தை­யாக நீங்கள் அச்­சம்­ப­வங்­களால் அச்­ச­ம­டைந்­தீர்­களா?
இல்லை.  நான் அதை விரும்­பினேன். நான் 6 வய­தாக இருந்­த­போது  அவ­ரின்­ ப­ட­மொன்றில் பாடினேன். பின்னர் சிங்­கப்பூருக்கு சென்று முதல் தட­வை­யாக மேடையில் பாடினேன். எங்கே ஸ்ருதி என அப்­பாவும் அம்­மாவும் தேடி­ய­போது நான் மெஜிக் பொக்ஸ் ஒன்­றி­லி­ருந்து வெளியே வந்தேன்.
நான் மேடையில் தோன்­றி­ய­போது   கமல்­ஹா­சனின் மகள் என்­பதால்  ரசி­கர்கள் ஆர்ப்­ப­ரித்­தனர். ஆனால், பின்னர் நான் பாடி முடித்­த­வுடன் மீண்டும் ஆர்ப்­ப­ரித்­தனர். அது எனக்­கா­னது. ‘வி லவ் யூ’ என ரசி­கர்கள் கூறி­னார்கள். அந்த மாதி­ரி­யான பாராட்­டுகள் உங்­களை ஒரு ரொக் நட்­சத்­திரம் போன்று உணரச் செய்யும்.
கேள்வி : உங்கள் பெற்­றோரின் பிரி­வினால் அதிர்ச்­சி­ய­டைந்­தீர்­களா?
இல்லை. அவர்கள் இணைந்து  மகிழ்ச்சியாக இருக்க முடி­யாவிட்டால்  மகிழ்ச்­சி­யாக பிரி­வது நல்­லது. தமது பெற்றோர் பிரி­வதை பார்த்த அனைத்து பிள்­ளை­களும் இதை கூறு­வார்கள். அவர்கள் தம­து­சொந்த வாழ்க்­கையை வாழ்ந்தார்கள். தமக்கு விருப்­ப­மா­னதை செய்­தார்கள். ஆனால் மகிழ்ச்­சி­யாக இருந்­தார்கள். அவர்கள் மகிழ்ச்­சி­யாக இருக்­கும்­வரை அ­க் ஷ­ரா­வுக்கும் (தங்கை) எனக்கும் மகிழ்ச்­சிதான்.
கேள்வி : சித்­தார்த்­துடன் லைவ் இன் முறையில் ஒன்­றாக வசிப்­ப­தாக கூறப்­ப­டு­வது குறித்து?
எனக்குத் தெரிந்­த­வரை அப்­படி நடக்­க­வில்லை.
கேள்வி : இந்­நாட்­களில் நீங்கள் தனு­ஷுடன் இணைத்து பேசப்­ப­டு­கி­றீர்கள்?
10,000 வதந்­திகள்  உள்­ளமை எனக்குத் தெரியும். என்னைப் பொறுத்­த­வரை நான் யாரு­டனும் தொடர்­பு­ப­டு­வது அரிது. தனுஷ் ஒரு முக்­கி­ய­மான நண்பர். ஏனெனில். “3” படத்தில் அப்­பாத்­தி­ரத்தில் நான் நடிக்க முடியும் என எவரும் எண்ணா­த­போது, எனக்கு ஆத­ர­வாக நின்று அதை என்னால் செய்ய முடியும் எனக் கூறி­யவர்  தனுஷ். எந்த வேலையில் உள்ள எவ­ருக்கும். அவர்கள் மீது நம்­பிக்கை வைப்­ப­வர்கள் அவ­சியம். அவ­ருக்கு நான் மிக கடமைப்பட்டுள்ளேன்.
அத்­துடன் நாம் நட்­பாக பழ­கு­கிறோம். பேசு­வ­தற்கு   எமக்கு அதிக விட­யங்கள் உள்­ளன. ஆனால்   நான் அதை­யெல்லாம் கூறி மக்­க­ளிடம்  நியா­யப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்கப் போவ­தில்லை. “எனது பின்­பு­றத்தில் ஒரு மைக்ரோ சிப் ஒன்றை பொருத்தி, என்­னைப்பின் தொட­ருங்கள், அப்­போது நீங்கள் உண்­மையை உணர்ந்­து­கொள்­ளலாம்” என நான் கூறப்­போ­வ­தில்லை.
இத்­து­றையில் அவர் எனது மிகச் சிறந்த நண்பர். கலை ரீதி­யா­கவும் அவர் எனக்கு உத­வி­யுள்ளார். எம்­மைப்­பற்றி மக்கள் அபத்­த­மாக பேசு­கி­றார்கள் என்­ப­தற்­காக, அவற்றை (அவர்­செய்த உத­வி­களை) நான் குப்­பைக்­கூ­டையில் எறிந்­து­வி­டப்­போ­வ­தில்லை.

கேள்வி : திரு­மணம் குறித்து நீங்கள் என்ன எண்­ணு­கி­றீர்கள்?
எதையும் எண்­ண­வில்லை. திரு­ம­ணத்துக்கு முன் குழந்­தை­களை பெற விரும்­பு­கிறேன். ஏன் என்று எனக்குத் தெரி­ய­வில்லை. நான் குழந்­தை­களை விரும்­பு­கிறேன்.
கேள்வி : யாரு­டனும் இணைந்து இருப்­பது குறித்து?
எனக்குத் தெரி­ய­வில்லை. நான் சுதந்­தி­ர­மா­னவள்.  யாருக்கும்   கேர்ள் பிரெண்­டாக நான் இருப்­பது கடினம் என எண்­ணு­கிறேன். ஏனெனில்  எப்­போதும் எனது சொந்தப் பய­ணத்தில் இருப்பேன். நான் ஒரு கலைஞர். நான் எப்­போதும் எனது தலை­யி­லுள்ள விட­யங்கள் குறித்து யோசித்­துக்­கொண்­டி­ருப்பேன். அது காண்­ப­தற்கு அரி­தான ஒரு நல்ல கனி­வான நபரை குழப்­பி­ விடும்.
கேள்வி : உங்கள் கடந்த கால, அனுபவங்கள் காரணமாக புதிய உறவு குறித்து தயங்குகிறீர்களா?
நான் எல்லாம் நன்மைக்கே என எண்ணுபவள். ஒரு திரைப்படம் நன்றாக ஓடாவிட்டால் அடுத்த படமும் ஓடாது என அர்த்தமல்ல. எனது வேலைக்காக எனது உறவை சமரசம் செய்துகொள்வேன். குறிப்பாக தற்போதைய கட்டத்தில். எனது உறவு  எனது வேலைக்கு குறுக்கீடாக வந்தால் அதை விட்டுவிடுவதற்கு இரு தடவை யோசிக்க மாட்டேன். சிலவேளை வயதாகும்போது நான் மாறக்கூடும். ஆனால் இப்போது எனது தொழிற்சார் வாழ்க்கைக்கு குறுக்காக ஏதேனும் வந்தால் அதை விட்டுவிடுவேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக