வியாழன், 20 ஜூன், 2013

TV யில் மல்யுத்தம் பார்த்து அதுபோல் 5 வயது தங்கையை குத்து விட்டே கொன்ற 13 வயது சிறுவன்


Five-year old Viloude Louis was killed by her 13 year old brother after he allegedly used wrestling moves that he learned from TV. The 13 year old told police that he was wrestling with the victim and used “WWE” style wrestling moves.
Viloude’s brother, Devalon Armstrong, allegedly slammed his sister onto a bed and beat her. She suffered multiple injuries including broken ribs, internal bleeding and lacerations of the liver. The boy called police after his sister stopped breathing. Paramedics were teaching him over the phone how to use CPR to keep her alive but she died shortly after police arrived and paramedics were unable to revive her.
டபிள்யூ.டபிள்யூ. ஈ' மல்யுத்தப் போட்டி பாணியில் தனது 5 வயது
'ஒன்றுவிட்ட' தங்கையை 13 வயது சிறுவன் 'குத்து விட்டு' கொன்ற சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஒர்லியன்ஸ் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் டபிள்யூ.டபிள்யூ. ஈ மல்யுத்தப் போட்டிகளை ஆவலுடன் பார்த்து, ரசித்து வந்தான். சம்பவத்தன்று ஐந்தே வயதான தனது ஒன்றுவிட்ட தங்கையை கட்டிலின் மேல் தள்ளிய அவன் டி.வி.யில் காட்டப்படுவதைப் போலவே அந்த சிறுமியின் வயிற்றில் சரமாரியாக குத்துகளை விட்டான். அவளது மார்பிள் அமர்ந்துக்கொண்டு தனது முழங்கையால் மார்பு, தொண்டை ஆகியவற்றின் மீது மாறி, மாறி தாக்கினான். வலி தாங்க முடியாமல் அந்த சிறுமி அழுது கதறிய போதும் அவனது ஆவேசம் தணியவில்லை.
சிறிது நேரத்தில் அந்த சிறுமி மயங்கி விழுந்ததும் அங்கு வந்த அவளது தாயார் ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு விரைந்தார். ஆனால், வரும் வழியிலேயே அவளது உயிர் பிரிந்து விட்டதாக கூறி டாக்டர்கள் கைவிரித்து விட்டனர். பிரேத பரிசோதனையில் சிறுமியின் மார்பு எலும்பு முறிந்து, ஈரலில் ஏற்பட்ட ரத்தக் கசிவினால் உயிர் பிரிந்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த 'பாசக்கார' அண்ணனை கைது செய்த போலீசார் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவத்திற்கு டபிள்யூ.டபிள்யூ. ஈ நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. எனினும், இந்த படுகொலைக்கு தங்களது நிகழ்ச்சிகளை காரணமாக்க வேண்டாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக