வியாழன், 20 ஜூன், 2013

17000 ஆசிரியர் பட்டய படிப்புக்கு 4,000 பேர் மட்டுமே விண்ணப்பம்! ஆசிரியர் பட்டயப்படிப்புக்கு ஆர்வம் குறைந்தது

நெல்லை:தமிழகத்தில் ஆசிரியர் பட்டய படிப்புக்கான விண்ணப்பங்கள் அவர்கள் மாணவர்களை தேடிப்பிடிக்கும் நிலை உருவாகி உள்ளது. கடந்த ஆண்டே பல தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்த ஆண்டும் அந்நிலை  தொடரலாம் என கருதப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் அரசு பட்டயப்பயிற்சி நிறுவனங்களில் விண்ணப்ப விநியோகம் ஓரளவு திருப்திகரமாக உள்ளது. நெல்லை  முனைஞ்சிப்பட்டி ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனத்தில் இந்த ஆண்டு 500க்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த ஆண்டைவிட  அதிகம் ஆகும்.இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் அதிக காலி இடங்கள் இல்லை என்பதும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கனவே 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பட் டயப்படிப்பு முடித்து பதிவு செய்து காத்திருக்கின்றனர் என்பதும் இக் கல்விக்கு ஆர்வம் குறைந்திருக்கலாம் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்
மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. ஆனால் இத்துறையில் வேலை வாய்ப்பு குறைந்து  வருவதால் இதில் சேர்ந்து கற்கும் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக குறைந்து வருகிறது.
தமிழகத்தில் 30 அரசு ஆசிரியர் பயிற்சி  நிறுவனங்கள், மற்றும் 500க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன.இங்கு ஆசிரியர் பட்டயப்படிப்புக்கு மட்டும் சுமார்  30 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதில் கலந்தாய்வுக்கு சுமார் 17 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆண்டு 4 ஆயிரத்துக்கும் கு றைவானவர்களே விண்ணப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதில் 90 சதவீதம் பேர் மாணவிகள் ஆவர்.ஜூலை மாதம் கலந்தாய்வு நடைபெற உள்ள நிலையில்  விண்ணப்பித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் தனியார் பட்டய படிப்பு நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன, dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக