செவ்வாய், 4 ஜூன், 2013

தமிழ்நாடு மாணவர் காங்கிரஸை கலைத்தார் ராகுல் காந்தி

டெல்லி: தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அமைப்பை கூண்டோடு கலைத்து விட்டார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. இதற்கான உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். தமிழக மாணவர் காங்கிரஸ் கட்சிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில் பெரும் மோசடிகள், குளறுபடிகள் நடந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. தலைவர் தேர்தலில் கலையரசன் வெற்றி பெற்றார். ஆனால் அவர் மாணவரே இல்லை என்றும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் மாணவர் காங்கிரஸ் அமைப்பை கூண்டோடு கலைத்து உத்தரவிட்டுள்ளார் ராகுல் காந்தி. மேலும் கலையரசனை தலைவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளார் ராகுல் காந்தி. தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் ராகுல் காந்தியின் இந்த அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக