லக்னோ: ஆண் வாரிசு வேண்டும் என்று கூறி கணவர் அடித்துத்
துன்புறுத்தியதால் வெறுத்துப் போன உ.பி. பெண் ஒருவர் தனது 5 மகள்களுடன்
தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திவ்லி என்ற
கிராமத்தில்தான் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் பெயர் பிரேமா தேவி. 38 வயதான இவரது கணவர் பெயர்
ஜெகதாம்பா பிரசாத் லோத். இவர்களுக்கு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆண் வாரிசு
இல்லை என்று கூறி பிரேமா தேவியை தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி
வந்துள்ளார் பிரசாத்.
இதனால் வெறுத்துப் போன பிரேமா தேவி, தனது மகள் கள் சுதா 12, ரேகா 10, நிஷா
7,. ரூபா 5, ஷிகா 2 ஆகியோருடன் தீக்குளித்து விட்டார்.
இதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அனைவரையும் மீட்க
முயற்சித்தனர். ஆனால் பரிதாபமாக 6 பேரும் தீயில் கருகிப் போய்
பிணமானார்கள்.
பிரேமாவின் சகோதரர் ஸ்ரீசந்த் கொடுத்த புகாரின் பேரில் பிரேமாவின் கணவர்
கைது செய்யப்பட்டார்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக