மும்பையில் 1993-ம்
ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான
வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உறுதி செய்தது.இப்போது சஞ்சய் தத், மராட்டிய மாநிலம், புனே எரவாடா மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். பிற தண்டனை கைதிகளைப்போலவே சஞ்சய் தத்தும் நடத்தப்படுகிறார். இவருக்கு சிறையில், பழைய செய்தித்தாள்களை மூலப்பொருளாகக் கொண்டு காகிதப் பைகள் தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்கப்படும் என சிறை சூப்பிரண்டு யோகேஷ் தேசாய் அறிவித்துள்ளார். சஞ்சய் தத்துக்கு, சிறையில் காகிதப்பைகள் தயாரித்து அளிப்பதற்காக தினக்கூலி ரூ.25 வழங்கப்படும். இந்த வேலையை செய்வதற்காக சஞ்சய் தத் சிறைக்குள் இருக்கிற தொழிற்சாலைக்கு செல்ல வேண்டியதில்லை. தனது அறையில் இருந்து கொண்டே செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக சிறையில் பிற கைதிகளுடன் சேர்ந்து வேலை செய்யுமாறு சஞ்சய் தத்துக்கு உத்தரவிடப்பட மாட்டாது என சிறை சூப்பிரண்டு யோகேஷ் தேசாய் தெரிவித்துள்ளார். சஞ்சய் தத் இன்னும் 42 மாத காலம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக