திங்கள், 17 ஜூன், 2013

பாலியல் கொடுமைக்கு பலியான மாணவியின் வீட்டிற்கு பைக்கில் சென்ற மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள காம்துனி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், கடந்த 7-ம்தேதி ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 6 பேரைக் கைது செய்துள்ளனர். ஏழை மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போலீஸ் வாகனங்களும் தாக்கப்பட்டன.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக, அப்பகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஹாஜி நூருல் இஸ்லாம் வந்தார். அவரை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவரது வாகனத்தையும் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி திங்கள்கிழமை அந்த கிராமத்திற்குச் சென்றார். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து, சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த மம்தா, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக