திங்கள், 17 ஜூன், 2013

காஞ்சி சங்கராச்சாரியார்... சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சங்கரராமன் கொலை வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு" காஞ்சிபுரம் வரதராஜ
பெருமாள் கோவில்
மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வருகிறது. இருதரப்பு வக்கீல்களின் விவாதமும் முடிந்து வழக்கு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்று வழக்கு விசாரணை நடந்தது. முதன்மை நீதிபதி முருகன் விடுமுறையில் சென்றிருந்ததால் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மோகன்தாஸ் முன்னிலையில்
விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட 23 பேரில் ஜெயேந்திரர் உட்பட 16 பேர் ஆஜராகவில்லை. விஜயேந்திரர், ரகு, சுந்தரேச அய்யர் உட்பட 7 பேர் ஆஜராகினர். ஆஜராகதவர்கள் சார்பில் அவர்களது வக்கீல்கள் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி மோகன்தாஸ் ஜூலை 5-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக