சனி, 15 ஜூன், 2013

வருஷக்கணக்காக ஓட்டலில் ஓசி சாப்பாடு போலீஸ்மீது உரிமையாளர் முறைப்பாடு

சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில்
ஓட்டல் நடத்தி வரும் தர்மராஜ், மணி, ஷண்முகம், சேதுராமன் ஆகியோர் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் ஓர் மனுவினை தாக்கல் செய்தனர ‘மதுரவாயல் (முன்னாள்) போலீஸ் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன் (தற்காலிக பணி நீக்கத்தில் உள்ளார்), முன்னாள் தலைமை காவலர் வி. திருவேங்கடம் (தற்போது மாங்காடு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார்) ஆகியோர் எங்கள் ஓட்டலில் 2002-ம் ஆண்டிலிருந்து கடனுக்கு சாப்பாடு வாங்கி சென்றனர். கடன் தொகையை கேட்டபோது தர மறுத்தனர். அத்துடன் தினந்தோறும் மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த 4 போலீஸ்காரர்களுக்கு ‘ஓசி’யில் காலை டிபன், மதிய சாப்பாடு, இரவு சாப்பாடு ஆகியவற்றை தர வேண்டும் என்று கேட்டனர். இதற்கு மறுத்ததால் எங்கள் ஓட்டல் ஊழியர்கள் 2 பேரை அடித்து அவர்கள் மீது போலீசார் பொய் கேஸ் போட்டனர்’ என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தமிழ்நாடு மனித உரிமை கமிஷன் தலைவர் கே. பாஸ்கரன், குற்றம் சாட்டப்பட்ட போலீசாருக்கு தலா 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த தொகையை தமிழக அரசே வழங்கிவிட்டு போலீசாரின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. சட்டத்தின் அனுமதியுடன் முறையாக தொழில் செய்பவர்களிடம் அத்துமீறி நடந்த போலீசாரின் அவமானகரமான செயலுக்கு அவர்கள மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக