சனி, 15 ஜூன், 2013

Acid victim Vinodini case? வினோதினி வழக்குக்கு என்னதான் நடக்கிறது? கொலைகாரன் இன்னும் வெளியே உள்ளான்

ஆசிட் வீசி வினோதினி கொல்லப்பட்ட வழக்கு எழும்பூர் நீதிபதி, சென்னை
டாக்டர்கள் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு காரைக்கால்:ஆசிட் வீச்சில் பலியான வினோதினி கொலை வழக்கு விசாரணையில் மரண வாக்குமூலம் பெற்ற சென்னை நீதிபதி, 3 டாக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.காரைக்கால் கோட்டுச்சேரி திருவேட்டக்குடியை சேர்ந்த சுரேஷ் (28) என்பவர் எம்எம்ஜி நகரில் வசித்து வந்த இன்ஜினியர் வினோதினியை ஒருதலையாக காதலித்தார். காதலை வினோதினி நிராகரித்ததால் கடந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதி வினோதினி மீது ஆசிட் வீசினார். 3 மாதமாக சிகிச்சை அளித்தும் பலனின்றி வினோதினி பிப்ரவரி 11ம் தேதி இறந்தார். கொலை வழக்கில் சுரேஷ் கைது செய்யப்பட்டார். மாவட்ட கோர்ட்டில் 232 பக்க குற்றப்பத்திரிகை கடந்த மார்ச்சில் தாக்கல் செய்யப்பட்டது. சென்னை ஐகோர்ட்டில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்து நிபந்தனை ஜாமீனில் சுரேஷ் வெளியே வந்தார்.


இந்நிலையில், காரைக் கால் 2ம் வகுப்பு குற்றவியல் கோர்ட்டில் சாட்சிகளிடம் முதல்கட்ட குறுக்கு விசாரணை கடந்த 10ம் தேதி நடந்தது. நீதிபதி மார்க்ரெட் ரோசலின் முன்பு அரசு தரப்பு சாட்சிகளான வினோதினியின் அப்பா ஜெயபால், அம்மா சரஸ்வதி, ஆசிட் விற்ற முத்துக்குமாரசாமி உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடந்தது. சுவரில் வளரும் மரத்தை அழிப்பதாக கூறி சுரேஷ் ஆசிட் வாங்கியதாக முத்துக்குமாரசாமி கூறினார்.
சம்பவத்தை நேரில் பார்த்த ஜெயச்சந்திரன், அசன், முத்துக்குமாரிடம் நேற்று குறுக்கு விசாரணை நடந்தது. ‘சம்பவத்தன்று இரவு 30 அடி தூரத்தில் வினோதினி வந்தார். திடீரென ஒருவர் வினோதினி முகத்தில் எதையோ வீசிவிட்டு பைக்கில் ஏறி தப்பினார். மறுநாள் முகத்தில் ஆசிட் வீச்சு காயத்துடன் இருந்த சுரேஷை போலீசார் கைது செய்து வினோதினி மீது ஆசிட் வீசியது இவர்தானா என கேட்டனர். இரவில் பார்த்த உருவம், வினோதினியின் தந்தை உறுதி செய்த நபர் ஆகியவற்றை வைத்து சுரேஷை அடையாளம் காட்டினோம்’ என்று அவர்கள் கூறினர். acid victim vinodini case?

3ம் கட்ட விசாரணையை வரும் 25ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். வினோதினி மரண வாக்குமூலத்துக்கு பரிந்துரை செய்த டாக்டர், வாக்குமூலம் பெற்ற எழும்பூர் பெருநகர கோர்ட் நீதிபதி, சென்னை ஆஸ்பத்திரியில் வினோதினிக்கு சிகிச்சை அளித்த டாக்டர், பிரேத பரிசோதனை செய்த டாக்டர், காரைக்காலில் வினோதினி வழக்கை விசாரிக்கும் 3 போலீஸ் அதிகாரிகள் ஆஜராகவும் உத்தரவிட்டார்.tamilmurasu.or

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக