சனி, 15 ஜூன், 2013

ராஜ்யசபா தேர்தல்: விஜயகாந்த் திமுகவை ஆதரிக்க முடிவு ? அதிமுகவின் ஆனிரை கவர்தலுக்கு ஆப்பு

டெல்லி மேல் சபைக்கு தமிழகத்தில் இருந்து காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 5 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. அதிமுக வேட்பாளர்கள் 5 பேரும் கடந்த 12ஆம் தேதி ஜெயலலிதா முன்னிலையில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த தேர்தலில் போட்டியிடும் முடிவில் திமுக உள்ளது. இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த திமுக தலைவர் கலைஞர், மாநிலங்களவை தேர்தல் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். குறிப்பிட்ட எந்தக் கட்சியிடமும் திமுக ஆதரவு கேட்கவில்லை. பொதுவாக எல்லா கட்சியிடமும் பேசுவோம் என்றார்.


மாநிலங்களவை தேர்தலை புறக்கணிப்பது என்று தேமுதிக முடிவு எடுத்தால், அது மறைமுகமாக அதிமுகவை ஆதரிப்பதுபோல் ஆகும் என்று தேமுதிகவினர் கருதுகின்றனர்.
6வது இடத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட்டால் அதற்கு ஆதரவு கொடுக்கவும் தேமுதிகவினருக்கு விருப்பம் இல்லை. புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் ஆதரவு கொடுக்காததால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர் தேமுதிகவினர்.
இந்த சூழ்நிலையில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட விஜயகாந்த், திமுகவை ஆதரிப்பது என்றும், ஆதரவு குறித்த தகவலை ஓரிரு நாளில் வெளியிட உள்ளதாகவும் தேமுதிக முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக