சனி, 1 ஜூன், 2013

தாயாளு அம்மையாரை நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜாராக வேண்டும் என்று ஏன் அழைக்கிறார்கள்?

சென்னையில் இன்று (01.06.2013) செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர்
கலைஞரிடம், அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் தயாளு அம்மாள் சாட்சியம் அளிக்க நேரில் வரவேண்டும் என சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், பொதுவாக நீதிமன்ற உத்தரவுகளைப் பற்றி நான் எப்போதும் கருத்து தெரிவிப்பதில்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரை எனது துணைவியார் தயாளு அம்மாளுக்கு உடல்நிலை சரியில்லை என்பது தமிழகம் முழுவதும் அறிந்த செய்தி. அவர் சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவ சான்றிதழ்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதிபதிக்கு முன்னால் இந்த விவரங்கள் நேரில் எடுத்துரைக்கப்பட்டபோதே மத்திய அரசுக்கு சொந்தமான ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்து அறிக்கை அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. சிபிஐ தரப்பு இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில், சிபிஐ நீதிபதி தற்போது நேரில் வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்த உத்தரவே இறுதியானதல்ல என்பதால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். இதற்கு மேலும் தயாளு அம்மாள் நேரில் வந்து சாட்சியம் அளிக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டு, அதனால் அவருடைய தற்போதைய உடல்நிலைக்கு மேலும் ஏதாவது பாதிப்பு ஏற்படுமேயானால், அதற்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வது. இவ்வாறு கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக