இந்த
மே மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடைபெற்ற கொலைகள், அதுவும் ஏடுகளில்
வெளிவந்த கொலைகள் மாத்திரம் எத்தனை தெரியுமா?. குடியாத்தத்தில் நகைக்கடை
ஊழியர் கொலை – ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளை. பனப்பாக்கத்தில் தந்தையை
அடித்துக் கொன்ற மகன். கூடுவாஞ்சேரி அருகே வாலிபர் சுபாஷ் ஓட ஓட விரட்டி
வெட்டிக் கொலை. கொடுங்கையூரில் ஆட்டோ டிரைவர் சரவணன் வெட்டிக் கொலை. சென்னை
புதுப்பேட்டையில் வேன் டிரைவர் ரமேஷ் கொலை. சோழவரம் அருகே தலை துண்டித்து
வாலிபர் கொலை. திருப்பெரும்புதூர் அருகே புரட்சி பாரதம் கட்சிப் பிரமுகர்
ராமு கழுத்தை அறுத்துக் கொலை. தாராபுரத்தில் காதல் மனைவியைக் கொன்ற வாலிபர்
ரமேஷ்.
வாலிபர் எரித்து கொலை ஜெயங்கொண்டம்
அருகே மகளின் கள்ளக்காதலன் பழனிச்சாமி கொலை. திருப்பூரில் மின்சாரம்
பாய்ச்சி மனைவி செல்வி கொலை. செங்குன்றம் அருகே வாலிபர் எரித்துக் கொலை.
கூடுவாஞ்சேரி அருகே கட்டிடத் தொழிலாளி சம்பத் அடித்துக் கொலை. பூந்தமல்லி
அருகே கழுத்தை இறுக்கி வாலிபர் கொலை. கோடம்பாக்கத்தில் லட்சுமி என்ற பெண்
கொலை. சென்னை ஆதம்பாக்கத்தில் டிராவல்ஸ் நடத்திய பெண் உஷாராணி கொலை. புது
வண்ணாரப்பேட்டையில் ரவுடி சுரேஷ் வெட்டிக்கொலை. மாதவரம் போதை மறுவாழ்வு
மையத்தில் சிகிச்சை பெற்ற வியாபாரி கோபால் அடித்துக் கொலை. கடையநல்லூர்
அருகே மாணவர் மதன் வகுப்பறையில் கொலை.
சொத்து தகராறில் கொலை
சென்னை
அருகே தி.மு.க. பஞ்சாயத்துத் தலைவர் பாலு குண்டு வீசிக்கொலை. வானூர் அருகே
அ.திமு.க. பிரமுகர் மூர்த்தி அடித்துக் கொலை. பூந்தமல்லி அருகே
குடிபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவர். சங்கராபுரம் மாஜி சேர்மன்
மர்ம கும்பலால் வெட்டிக் கொலை. சங்கராபுரத்தில் தி.மு.க. செயலாளர் முனுசாமி
வெட்டிக் கொலை. தண்டையார்பேட்டையில் துண்டு துண்டாக வெட்டி வாலிபர்
படுகொலை. குரோம்பேட்டை அருகே வீட்டுக்குள் கட்டிப் போட்டு முன்னாள்
கவுன்சிலர் குப்புசாமி படுகொலை. வளசரவாக்கத்தில் சொத்துத் தகராறில் தந்தை
பரமசிவம் கொலை.
கொன்று புதைப்பு
ராஜபாளையத்தில்
ஒன்றரைக் கோடி ரூபாய்க்காக தொழில் அதிபர் மகன் பிரேம் குமார் கொன்று
புதைப்பு. அரியலூரில் இரண்டு வயது குழந்தை கடத்திக் கொலை. புரசைவாக்கத்தில்
மதுக்கடை பார் முன்பு வாலிபர் படுகொலை. கொருக்குப்பேட்டையில் புது
மாப்பிள்ளை கமல்ராஜ் வெட்டிப் படுகொலை. நாகர்கோவிலில் திருமணம் செய்த பெண்
மாமனாருடன் வெட்டிக் கொலை. சோழவரம் அருகே மது குடிக்கும் தகராறில்
பெயிண்டர் விமல்பிரபு படுகொலை. செங்குன்றம் அருகே பரோலில் வந்த கைதி
முத்துபிரகாஷ் வெட்டிக் கொலை. பல்லடம் அருகே ராணி என்பவர் சரமாரி வெட்டிக்
கொலை. செம்மஞ்சேரியில் வாலிபர் சுரேஷ் கொலை.
குத்திக் கொலை
சோழிங்கநல்லூர்
அருகே பூட்டிய வீட்டில் பெயிண்டர் சுரேஷ் பிணம். சங்கராபுரம் அருகே
விடுதலைச் சிறுத்தைப் பிரமுகர் விசுவநாதன் வெட்டிக் கொலை. மறைமலைநகர் அருகே
நள்ளிரவில் வாலிபர் முருகன் வெட்டிக் கொலை. அருப்புக்கோட்டையில்
சொக்கலிங்கம் குத்திக் கொலை. சேரன்மகாதேவியில் தொழிலாளி இசக்கி முத்து
பாண்டியன் படுகொலை. சேலையூர் அருகே ஆட்டோ டிரைவர் ராஜேஷ் தலையில்
அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை. ராணிப்பேட்டை அருகே சிலோன் மோகன் படுகொலை.
சேலம் ரியல் எஸ்டேட் அதிபர் ரங்கநாதன் துண்டு துண்டாக வெட்டிக் கொலை.
சென்னையில் மாநகராட்சி ஊழியர் வீரா கொலை. சென்னையில் டெய்லர் முனியாண்டி
படுகொலை. செங்கோட்டை அருகே அ.தி.மு.க. நிர்வாகி முத்தையா வெட்டிக் கொலை.
51 கொலைகள்
வேலூர்
காவல் நிலையம் அருகே இளம்பெண் வெட்டிக் கொலை. சென்னையில் பழ வியாபாரி மாரி
வெட்டிக் கொலை. சூளையில் வியாபாரம் செய்தபோது வேலு வெட்டிக் கொலை.
வியாசர்பாடியில் பெண் தகராறில் வாலிபர் ராஜா படுகொலை. வானூர் கோயில்
திருவிழாத் தகராறில் தே.மு.தி.க. பிரமுகர் பாஸ்கர் வெட்டிக் கொலை. இவ்வாறு
ஒரே மாதத்தில் 51 கொலைகள் நடந்துள்ளன. இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக