வியாழன், 27 ஜூன், 2013

இந்தியாவின் முதல் சமுக நீதியாளர் சாயாஜி மகராஜ் 139-வது பிறந்த தினம்

 ஜுன் 26, மராட்டிய மாநிலம் கோலாப்பூரை ஆண்டு வந்த போஸ்லே அப்பாசாஹிப் கட்கே மற்றும் ராதாபாய்  ஆகியோர்களின் புதல்வராக 1874-ம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தார். சமூகத்தில் பிறபடுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்னும் உண்ணதமான வழிக்கு பாதை வகுத்துத்தந்தவர், இவரது தந்தை கல்வி கற்க முற்பட்ட போது சூத்திரர்கள் கல்வி கற்ககூடாது என்று கூறி கல்விகற்றுத்தர பார்ப்பனர்கள் முன்வராத நிலையில் பரோடாவிலிருந்து  பார்ஸிமொழி ஆசிரியரை வரவழைத்து வெளியில் யாருக்கும் தெரியாதவாறு கல்வி கற்றார், குழந்தைப் பருவத்தில் இருந்த சாகு விற்கும் இந்த காட்சி மனதில் பெரும் பாதிப்பை உண்டாக்கி விட்டது, 1894-ல் பட்டத்து சத்ரபதி சாஹூஜி மகராஜ் என்ற பெயருடன் பட்டத்திற்கு வந்தார். தன்னுடைய அரண்மனை எங்கும் பார்ப்பனர்களின் ஆதிக்கமே நிறைந்திருப்பதைக் கண்டார். பார்ப்பனர்களுக்கு எதிராக கல்விப் புரட்சியை துவங்கிய சாகு மகராசர் கோலாப்பூரில் பல கல்விச்சாலைகளை அமைத்தார், மற்றும் மாணவர்கள் தங்கிப் பயில விடுதிகளைக் கட்டினார். கோலாப்பூரில் உள்ள பஞ்ச கங்கை நதியில் குளிக்கும் போது பார்ப்பனர்கள் வேத ஸ்லோகங்களைப் பாடுவார்கள் ஆனால் நீண்ட நாட்களாக அவர்கள் புராணக் கதைகளை மட்டும் ஸ்லோகங்களாகப் பாடி வருவதை அறிந்த மகராசர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து இதற்கான காரணம் கேட்டதற்கு அரண்மனைப் பார்ப்பனர்கள் சத்திரியர்களுக்கு மட்டும் தான் வேத பாரயணங்கள் படிப்போம் ஆனால் நீ சத்திரியன் அல்ல நீ சூத்திரனே என்று கூறி அவரை அவமானப்படுத்தினார்கள்.
இதனை அடுத்து பார்ப்பனர்களுக்கு இதுவரை அளித்துவந்த அனைத்து சலுகைகளையும் உடனடியாக நிறுத்த உத்தரவிட்டது மட்டுமல்லாமல் சங்கராச்சாரியாருக்கு (கோலாப்பூர்) தானமாகக் கொடுத்த நிலங்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.
இது குறித்து பாம்பே (மும்பை) ஆங்கிலேய நீதிமன்றத்தில் முறையிட நீதிமன்றம் சாகுமகராசாவிற்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கி பார்ப்பனர்களுக்கு பாடம் புகட்டியது,

சாகு மகராசர் தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு அனைத்து வேலைகளிலும் 50% வேலைவாய்ப்பிற்கு உத்தரவிட்டார். இந்தியாவில் சமூக நீதிக்கான பாதையை திறந்து வைத்தார், இதனை அடுத்து மெல்லமெல்ல அனைத்து பகுதிகளிலும் தென்னகத்திலும் இட ஒதுக்கீடு ஆணை பிறப்பித்தற்கு இதுவே வழிகாட்டியாக அமைந்தது.
சாகு மகராசர் அவர்கள்  பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் நடத்தி வந்த   மூக் நாயக்(ஊமைகளின் தலைவன்) என்ற இதழ் நடத்த பெரிதும் துணையாக நின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக