சனி, 25 மே, 2013

Chennai ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார்

சென்னையில் ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் தியாகராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்கு ஒன்றில் ரவுடி விமல்ராஜுக்கு சம்மன் கொடுக்க சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. ரவுடி விமல்ராஜ் வெட்டியதில் தியாகராஜனின் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் பாதித்தது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் நள்ளிரவில் உயிரிழந்தார். போலீஸ்காரர் தியாகராஜனை வெட்டிய ரவுடி விமல்ராஜ் கைது செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக