சனி, 25 மே, 2013

AVM குருநாத்திற்கு சென்னை துபாய் தரகர்களுடன் தொடர்பு இருந்தது!

  சீனிவாசனின் மகன் பகீர் தகவல்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிஇஓவுக்கும் சென்னை, துபாயில் உள்ள கிரிக்கெட் சூதாட்ட தரகர்களுடன் எப்பொழுதுமே தொடர்பு இருந்தது என்று அவரது மைத்துனரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சீனிவாசனின் மகனுமான அஸ்வின் தெரிவித்துள்ளார்.அஸ்வின் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் (gay) ஆவார். கடந்த ஆண்டு மே மாதம் மும்பையில் உள்ள பார் ஒன்றில் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட அஸ்வின் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மச்சான் மெய்யப்பன் குறித்து அஸ்வின் கூறுகையில்,குருவுக்கு சென்னை மற்றும் துபாயைச் சேர்ந்த பல்வேறு பிரபல தர்களுடன் தொடர்பில் இருந்தார். இந்த தொடர்பு ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பில் இருந்தே இருந்தது. சைட் பிசினஸாக துவங்கியது ஆண்டுகள் செல்ல செல்ல பெரிய வியாபாரமாகவிட்டது.குரு எனது தந்தையின் வியாபாரத்தில் நிலையான இடத்தைப் பிடித்து வருகிறார். அவரது மனைவியும், எனது சகோதரியுமான ரூபா என் தந்தையின் நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸின் எக்சிகியூட்டிவ் டைரக்டராக உள்ளார். குரு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக மட்டும் இருக்க சம்மதித்தார். எனது தந்தை சீனிவாசன் தனது விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப துபாயில் 4 மணிநேரம் செலவிடுவது வித்தியாசமாக இல்லை? அது ஏன் அவர் குவைத், ஷார்ஜா அல்லது வேறு எங்காவது எரிபொருள் நிரப்புவதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக