வெள்ளி, 24 மே, 2013

வெப்காமில் காதல் மனைவியின் தற்கொலையை கண்ட கணவன்

மும்பை: காதல் திருமணம் செய்த இளம் பெண்,வரதட்சணை பிரச்னையால் ,
பெற்றோர் வீட்டில் இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை ஆன்லைன் வாயிலாக கணவன் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மகாராஷ்டிரா மாநிலம் தலைநகர் மும்பை புறநகர் பகுதியான ஜுகூ பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா ஸ்ருதி (25),இவரும், சுவப்னில் சுர்வி என்பவரும், காதலித்து வீட்டிற்கு தெரியாமல் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். கணவனின் பெற்றோர் இவர்கள் திருமணத்தை ஏற்றுக்கொண்டாலும், வரதட்சணை அதிகமாக கேட்டதால் , கணவனும் ,மனைவியும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்தனர்.வெப்கேமிராவில் தற்கொலையை நேரில் பார்த்த கணவன் இந்நிலையில் தாய்வீட்டில் வசித்து வந்த ஷோபான , தனது கணவனிடம் ஆன்லைனில் சாட்டிங் மூலம் பேசி வந்தார். நேற்று ஷோபனாஸ்ரூதி தனது லேப்டாப் வாயிலாக ஆன்லைன் சாட்டிங் மூலம் வெப்கேமிராவில் கணவனுடன் பேசினார். அப்போது மிகுந்த மன உளச்சலில் இருந்த ஷோபான , கணவன் பார்க்கும்படியாக, பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த காட்சியை வெப்கேமிராவில் கணவன் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மொபைல் போன் மூலம் ஷோபானாவின் உறவினருக்கு தகவல் தெரிவித்தார். எனினும் ஷோபா உயிர் பிரிந்தது. இதையடுத்து, ஜுகூ போலீஸ்நிலையத்தில், கணவன் சுவப்னில் சுர்வி மீது வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக