வெள்ளி, 24 மே, 2013

அன்புமணிக்கு அகிலேஷ் யாதவ் போதுமாம் திமுக தேவை இல்லையாம்!

அகிலேஷ்யாதவ் நம்பிக்கை கொடுத்திருக்கிறார்;
அதனால் திமுகவுடன் கூட்டணி இல்லை : அன்புமணி ராமதாஸ் பேட்டி
>பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்நிலையில் இன்று அன்புமணி அப்பல்லோ வந்து தந்தையின் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு வெளியே வந்தார்.   அப்போது அவர் செய்தியாளர்களிடன் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.>ராமதாசின் உடல்நிலை எப்படி இருக்கிறது?அய்யா நலமுடன் இருக்கிறார். இன்னும் மூன்று நாட்களில் முழுவதுமாக குணமடைந்து வீட்டிற்கு சென்று விடுவார்.ஜெ.குரு மீது அடுத்தடுத்த போடப்பட்டு வரும் வழக்குகள் பற்றி?<குரு மீது இந்த அரசு அதிகமாக பழிவாங்குகிறது.  எனது கட்சிக்காரர்களை 95 பேருக்கும் அதிகமாக கைது செய்து வைத்துள்ளார்கள்.  காவல்துறை குறித்து விரைவில் ஜனாதிபதியிடம் சென்று புகார் தெரிவிப்பேன்.வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி?<திமுக,அதிமுகவுடன் கூட்டணி கிடையாது.  எந்த திராவிட கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது.  அகிலேஷ்யாதவ் எனக்கு போன் செய்தார். அவர் நம்பிக்கை கொடுத்திருக்கிறார். வன்னியர் சமுதாயத்திற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கூறினார்.  அதனால் எந்த கட்சியினருடனும் கூட்டணி கிடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக