வியாழன், 23 மே, 2013

AVM மெய்யப்பனின் பேரன் குருநாத் IPL சூதாட்டத்தில்? மெய்யாலுமா ?


நயன்தாரா திரிஷா லட்சுமி ராய் சுருதி ஹாசன் ஆகியோரையும் இவர்தான் IPL க்கு அழைத்து வந்தாரமே ?
சென்னை: ஐபிஎல் சூதாட்டத்தில் தொடர்புடையதாக பேசப்படும் குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ மட்டுமல்ல அவர் மேலும் பல பதவிகளை வகித்து வருகிறார்.ஐபிஎஸ் ஸ்பாட் பிக்ஸிங்கில் தொடர்புடையதாக பேசப்படும் குருநாத் மெய்யப்பன் யார் என்பதை பார்ப்போம். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான சீனிவாசனின் மருமகன். அவர் பிரபல திரைப்பட நிறுவனமான ஏவிஎம்-இன் நிறுவனர் மெய்யப்ப செட்டியாரின் பேரன். ஏவிஎம் சரவணனின் சகோதரர் ஏவிஎம் பாலசுப்ரமணியனின் மகன்.அவர் சென்னை அணி தவிர, ஏவிஎம் புரடக்ஷன்ஸ் அன்ட் என்டர்டெய்ன்மென்ட, ஏவிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் ஏவிஎம் கன்ஸ்டரக்ஷன்ஸின் மேனேஜிங் டைரக்டராக உள்ளார்.குருநாத் மோட்டார் பந்தயம் மற்றும் கோல்ப் விளையாட்டுகளில் ஈடுபாடு உள்ளவர். அவரை அனைவரும் 'பிரின்ஸ் குருநாத்' என்று அழைப்பார்களாம். குருநாத் எப்பொழுதும் அமைதியாக, புன்முறுவலுடன் காணப்படுவார் என்று அவரிடம் பேசியவர்கள் தெரிவித்துள்ளனர்.ஏவிஎம் குடும்பத்தில் பிறந்தாலும் அவர் மீடியாவின் கண்களில் இருந்து முடிந்த வரை ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் ஸ்பாட் பிக்ஸிங் மூலம் அனைத்து டிவி சேனல்கள் மற்றும் செய்தித்தாள்களில் முக்கியச் செய்தியாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக