சனி, 25 மே, 2013

என் தங்கையை விஸ்வநாதன் ஆனந்துக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினர்: சீனிவாசன் மகன்

மும்பை: தனது சகோதரி ரூபாவை பிரபல செஸ் விளைாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு திருமணம் செய்து கொடுக்க தனது பெற்றோர் விரும்பியதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சீனிவாசனின் மகன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.இது குறித்து அஸ்வின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,எனக்கும் என் தந்தைக்கும் இருக்கும் பிரச்சனையை பெரிதாக்க குரு எனது பெற்றோரின் மனதை கெடுத்து வருகிறார். எனக்கிருக்கும் போதைப் பொருள் பழக்கத்தால் குரு என் தந்தையின் வியாபாரத்திற்கு உதவி செய்வதாக அவர் தெரிவித்து வருகிறார்.ஆனால் உண்மையில் நான் அவரை விட தகுதியும், அனுபவமும் உள்ளவன். மெட்ராஸ் கிளப்பில் விளையாடும்போது குருவும், ரூபாவும் டேட் செய்தது எனது பெற்றோருக்கு பிடிக்கவில்லை. அவர்  எங்களது பிராமணர் வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல. அவர் செட்டியார் என்பதால் என் பெற்றோருக்கு பிடிக்காமல் இருந்தது.குருவை மணந்தால் உன்னை ஒதுக்கி வைத்துவிடுவோம் என்று என் அம்மா சித்ரா ரூபாவை மிரட்டினார். எனது தந்தையோ ஒவ்வொரு நாள் மாலையும் 5 கிளாஸ் ஸ்காட்சை குடித்துவிட்டு குருவுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் சாபம் விட்டார்.
எனது சகோதரி ரூபாவை பிரபல செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு திருமணம் செய்து கொடுக்க அவருடன் எனது பெற்றோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ரூபா குருவை மணந்தார். எனது தாய் மாமா சங்கர் இறந்தபோது கூட எனது பெற்றோர் ரூபா, குருவை அழைக்க விரும்பவில்லை.ஆனால் நான் தான் என் பெற்றோரை வற்புறுத்தி அவர்களை அழைக்க வைத்தேன். ரூபாவும், குருவும் எனது பெற்றோருடன் எனக்கு பிரச்சனை ஏற்பட்டதில் இருந்து என்னுடன் பேசவில்லை என்றாலும் எனக்கு அவர்கள் மீது எந்த கோபமும் இல்லை. ஆனால் எப்பொழுதோ எனக்கு இருந்த போதைப் பழக்கத்தை வைத்து எனது பெற்றோரை எனக்கு எதிராக திருப்பிவிடுவதை நான் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக