வியாழன், 23 மே, 2013

IPL சூதாட்டம்.6 முன்னணி தமிழ் நடிகைகள்! in trouble


சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் பிரபல தமிழ் நடிகைகளுக்கும் தொடர்புள்ளதாக போலீஸ் சந்தேகிக்கிறது. எனவே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதால், சம்பந்தப்பட்ட நடிகைகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு நாளும் புதுப்புது புகார்களும் சதிகளும் சூதாட்ட மோசடிகளும் அம்பலமாகி வருகின்றன. சென்னையில் சி.பி. சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தி கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 7 பேரை கைது செய்தனர். மேலும் 7 பேரை தேடி வருகிறார்கள். அடுத்த கட்டமாக சி.பி. சி.ஐ.டி. போலீசாரின் பார்வை நடிகைகள் பக்கம் திரும்பியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் தொடர்பு உள்ள நடிகைகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. செய்தி தொடர்பாளரும் துணை போலீஸ் சூப்பிரண்டுமான வெங்கட்ராமன் நிருபர்களிடம் கூறும்போது, "நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சிலருடன் சூதாட்ட தரகர்களுக்கு தொடர்பு இருப்பதாக படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது.
அதுபற்றி விசாரணை நடத்தப்படும்," என்றார். கிரிக்கெட் மைதானத்துக்கு சென்று போட்டிகளை பார்த்து ரசித்த நடிகைகள், கிரிக்கெட் வீரர்களுக்கு அளித்த விருந்தில் பங்கேற்ற நடிகைகள், கிரிக்கெட் வீரர்களுடன் சுற்றிய நடிகைகள் யார் யார் என்று போலீசார் விசாரித்து ஒரு லிஸ்ட் தயாரித்துள்ளார்கள். இதில் சில முன்னணி தமிழ் நடிகைகள் இடம்பெற்றுள்ளனர். கிரிக்கெட் அணிகள் ஒவ்வொன்றுக்கும் விளம்பர தூதுவர்களாக நடிகைகள்தான் நியமிக்கப்பட்டனர். கிரிக்கெட் போட்டியை காண மைதானத்துக்கு வந்து விசில் போட்ட சில நடிகைகள் கட்டணமாக ரூ.2 லட்சம் வரை வாங்கியுள்ளனர். அவர்களுக்கும் சூதாட்ட தரகர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமாக உள்ள 6 நடிகைகள் இந்த விசாரணை வளையத்தில் வருகின்றனர். விரைவில் அவர்களிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர்
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக