திங்கள், 8 ஏப்ரல், 2013

மதுரையில் புதிய தி மு க உதயம்? பேசிக்கொள்கிறார்கள்? NEW DMK?

மதுரையில் நேற்று திடீரென மு.க.அழகிரியை கனிமொழி திடீரென சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களை படபடக்க வைத்துள்ளது.
மதுரைக்கு வந்த கனிமொழி, திடீரென முடிவு எடுத்து அழகிரியை சந்தித்தார் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏற்கனவே பக்காவாக திட்டமிடப்பட்ட சந்திப்பு அது.
மதுரை விமான நிலையத்தில் கனிமொழி வந்து இறங்குவது இது முதல் தடவையல்ல. முன்பெல்லாம், அவர் வரும்போது நாலைந்து பேர் வரவேற்க காத்திருப்பார்கள். அவ்வளவுதான். ஆனால் நேற்று, வழக்கத்திற்கு மாறாக, அவரை வரவேற்க அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான மூர்த்தி, மன்னன், மிசா பாண்டியன், கவுஸ்பாட்சா, எஸ்ஸார் கோபி என பெருங்கூட்டமே விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
ஆட்டம் பாட்டம் என பெரும் வரவேற்பு கொடுக்கப்பட்ட போதே, கனிமொழி, அஞ்சாநெஞ்சரின் ரூட்டில் வருகிறார் என புரிந்து விட்டது.
அப்போதே மதுரை தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு முகம் இருண்டு போனது. அடுத்து என்ன நடக்கிறது என படபடப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கனிமொழி தலைமையில் செயல்படும் கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மதுரை மாவட்ட அமைப்பாளர் ஜி.பி.ராஜாவின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, கனிமொழி மதுரை வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களது படபடப்பை அதிகரிப்பது போல, ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பிய கனிமொழி, நேராக சென்ற இடம், அழகிரி வீடு!
viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக