வியாழன், 11 ஏப்ரல், 2013

கடற்படை அதிகாரி மீது மனைவி புகார்! அதிகாரிகளுடன் செக்ஸ் வற்புறுத்துகிறார்

Police registered a case today against a Naval officer and nine others, following a complaint by his wife, alleging that she was sexually and mentally harassed by top naval officials in front of his husband.
Besides the Naval officer, the police have also registered case against six Naval officials and three family members of the complainant's husband.
According to the complaint Sujatha (25), a native of Orissa, who married Lt Col Ravi Kiran in 2012 at Visakhapatnam, she was allegedly sexually harassed in front of her husband.
In the complaint she also alleged that her husband forced her to indulge in sex with several top officials in order to get promotion and when she resisted, she was mentally and physically harassed by him.
 லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றும் தனது கணவர் ரவி கிரண் மீது கொச்சி போலீசில் சுஜாதா செக்ஸ் தொல்லை புகார் கொடுத்து உள்ளார். அதில், பதவி உயர்வு பெறுவதற்காக கணவர் ரவி கிரண், மூத்த அதிகாரிகளுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளுமாறு தன்னை வற்புறுத்தியதாகவும், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர் தன்னை துன்புறுத்தியதாகவும் கூறி உள்ளார்.
 இந்திய கடற்படையில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றுபவர் ரவி கிரண். இவரது மனைவி பெயர் சுஜாதா (வயது 25). இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இருவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் திருமணம் நடைபெற்றது.
கணவரின் கண் முன்னாலேயே தான் செக்ஸ் தொல்லைக்கு ஆளானதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இது தொடர்பாக, டெல்லியில் உள்ள ராணுவ அமைச்சகத்தை தொடர்பு கொண்டு தான் புகார் செய்ய முயன்றதாகவும், அப்போது தன்னிடம் பேசிய அங்குள்ள ஒரு அதிகாரி கடற்படையின் தலைமையிடமான கொச்சியில் புகார் செய்யுமாறு தனக்கு யோசனை தெரிவித்ததாகவும் சுஜாதா தனது புகார் மனுவில் தெரிவித்து உள்ளார்.
இந்த புகார் தொடர்பாக சுஜாதாவின் கணவர் ரவி கிரண், அவரது குடும்பத்தைச்சேர்ந்த 3 பேர் மற்றும் 6 கடற்படை அதிகாரிகள் மீது இந்திய தண்டனை சட்டம் 498, 354, 506(1), 341 ஆகிய பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக நேற்று போலீசார் தெரிவித்தனர்.
இதனால், தான் கைது செய்யப்படலாம் என்று கருதி முன் ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் கடற்படை அதிகாரி ரவி கிரண் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். ஆனால் இந்த புகாரை கடற்படை நிராகரித்து உள்ளது.
இது தொடர்பாக கடற்படையின் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், கடற்படை அதிகாரிக்கும் (ரவி கிரண்), அவரது மனைவிக்கும் (சுஜாதா) இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை, பரஸ்பர குற்றச்சாட்டுகள் காரணமாக தனது கணவரின் மீது அந்த பெண் கொச்சி போலீசில் புகார் செய்து இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையேயான பிரச்சினையை பேசி தீர்த்து வைக்க சக அதிகாரிகளும் அவர்களுடைய மனைவிமார்களும் முயன்றதாகவும், ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த பெண் தனது கணவரின் சக அதிகாரிகள் மீதே குற்றம் சுமத்தி இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த பிரச்சினை குறித்து சட்ட ரீதியாக விசாரித்து விரைவில் தீர்வு காண கடற்படை முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக