வியாழன், 11 ஏப்ரல், 2013

அஞ்சலி: நான் நன்றாகவே இருக்கிறேன். என்னை யாரும் கடத்தவில்லை

 நடிகை அஞ்சலி ஐதராபாத்தில் மாயமானது குறித்து தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. படப்பிடிப்புக்கு ஐதராபாத்துக்கு சென்ற அவர், அங்கு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அங்கு கடந்த 8ஆம் தேதி முதல் மாயமாகியுள்ளார். அஞ்சலியை கண்டுபிடித்து தருமாறு அவரது சகோதரர் ரவிசங்கர் ஜீப்ளி ஹில்ஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் அஞ்சலியை காணவில்லை என்று வழக்குப் பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். அஞ்சலி தானாக ஓட்டலை விட்டு வெளியேறினாரா அல்லது அவரை கடத்தினார்களா என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் அவர் தங்கியிருந்த ஓட்டலின் சிசிடிவி கேமராவை அம்மாநில போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். அப்போது அதில் அஞ்சலி ஓட்டலைவிட்டு வெளியேறிய காட்சி பதிவாகி இருந்தது. அதில் ஜீன்ஸ் பேன்டும், சர்ட்டும் அணிந்து, வெளியேறி வெளியே தயாராக இருந்த காரில் ஏறி செல்வது போன்றும் வீடியோ காட்சியில் பதிவாகி இருக்கிறது.
ஓட்டலை விட்டு வெளியேறிய அஞ்சலி, ஐதராபாத் நகருக்கு வெளியே உள்ள விமான நிலையித்தில் இருந்து கிட்டதட்ட 20க்கும் மேற்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்றும், அதில் சென்னையைச் சேர்ந்த ஒரு டாக்டரிடமும் பேசியுள்ளதாகவும், அவரிடமும் போலீசார் விசாரணை நடத்துவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
சகோதரர் ரவி சங்கருடன் நடிகை அஞ்சலி செல்போனில் பேசிய பதிவு வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதில்,
அஞ்சலி: ரவி நான் அஞ்சலி பேசுறேன். நீ போலீசில் கொடுத்திருக்கிற கேவை வாபஸ் வாங்கு.
ரவி: நீ எங்க இருக்க? எப்படி இருக்க? எந்த கேவை பற்றி சொல்ற?
அஞ்சலி: நல்லா இருக்கேன். நான் கடத்தப்பட்டதா கொடுத்திருக்கிற கேசை வாபஸ் வாங்கு
ரவி: அந்த கேசை வாபஸ் வாங்க முடியாதுன்னு போலீஸ் சொல்றாங்க. நீ வந்தாதான் வாபஸ் வாங்க முடியும்.
அஞ்சலி: சரி அது இருக்கட்டும், சித்ரா தேவி மேலே கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டாம்.
ரவி: சரி நீ எப்ப வருவ. உன்னை யாரும் கடத்தினாங்களா. நீ ஏன் ஓட்டலை விட்டுபோன
அஞ்சலி: நான் நன்றாகவே இருக்கிறேன். என்னை யாரும் கடத்தவில்லை. சூரிபாபு தான் அன்னிக்கு என்னை முடியை பிடிச்சு அடிச்சாரு இல்லைன்னா ஏன் வெளியே போறேன்.
இவ்வாறு அந்த உரையாடல் பதிவாகியுள்ளதாக வெளியாகி உள்ளது.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக