வியாழன், 11 ஏப்ரல், 2013

வட கொரிய ஜனாதிபதி உத்தரவுப்படி நான் 115 பேரை கொன்றேன்” ‘டாப்’ பெண் உளவாளி சொல்கிறார்

தற்போது தென் கொரியாவில் வசிக்கும் வட கொரியாவின் முன்னாள் ‘டாப்’
பெண் உளவாளி, “வட கொரிய ஜனாதிபதியின் உத்தரவுப்படி நான் 115 பேரை கொன்றேன்” என்று தெரிவித்திருக்கிறார். மரண தண்டனையில் இருந்து மன்னிப்பு வழங்கப்பட்டு, தற்போது தென் கொரியாவில் வசிக்கிறார் இவர்.
வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், தென் கொரியாவில் ரகசிய இடம் ஒன்றில் இருந்து இவர் கொடுத்த பேட்டி, தென் கொரிய மீடியாக்களில் பரபரப்பாக வெளியாகியுள்ளது.
இந்த முன்னாள் பெண் உளவாளி, தென் கொரியா விமானம் ஒன்றில் பயணியாக சென்று குண்டு வைத்துவிட்டு பாதி வழியில் இறங்கிவிட, விமானம் வானில் வெடித்து சிதறியது. அதில் பயணம் செய்த 115 பேரும் கொல்லப்பட்டனர்.

தற்போது 51 வயதாகும் கிம் ஹைன்-ஹி, 25 வயது இளம் பெண்ணாக இருந்தபோது செய்த வேலை அது.
“1987-ம் ஆண்டு, அப்போதைய வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங்-இல், தென் கொரியாவுக்கு சொந்தமான கொரியன் ஏர்வேஸ் விமானம் KAL 858ஐ குண்டு வைத்து வீழ்த்தும்படி உத்தரவிட்டார்” என்கிறார் கிம்.
அதையடுத்து, இளம் பெண்ணான இவரும், சற்று வயதான மற்றொரு உளவாளியான கிம் சியுங்-இல் என்பவரும், தந்தை-மகள் என்ற கெட்டப்பில் ஐரோப்பா சென்றனர். அங்கிருந்து ஈராக் தலைநகர் பாக்தாத் வந்து, கொரியன் ஏர்வேஸ் விமானம் KAL 858ல் ஏறினர்.
இது பாக்தாத்தில் இருந்து தென் கொரியாவின் தலைநகர் சோல் செல்லும் பயணிகள் விமானம்.
இந்த விமானத்தை தேர்ந்தெடுக்க காரணம், விமானம், பாக்தாத்தில் இருந்து புறப்பட்டு, அபுதாபியில் பயணிகளை ஏற்றி இறக்கிய பின்னரே சோல் நகரத்துக்கு செல்லும். இந்த அப்பா-மகள் உளவாளிகள், பாக்தாத்தில் விமானம் ஏறி, விமானத்தில் வெடிகுண்டை வைத்துவிட்டு, அபுதாபியில் இறங்கி கொண்டனர்.
அங்கிருந்து புறப்பட்ட விமானம், தென் கொரியா செல்லுமுன், தாய்லாந்து எல்லை அருகே வானில் வெடித்து சிதறியது. அதில் பயணம் செய்த 115 பேரும் கொல்லப்பட்டனர்.
அதுவரை இவர்கள் திட்டம் வெற்றி. ஆனால், அதன்பின் மிக சுலபமாக அபுதாபியில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Read more: http://viruvirupu.com/from-europe-to-see-over-the-jungle-near-the-thai-border-51510/#ixzz0uSKvhJ4b

திட்டத்தை நிறைவேற்றும்போது சிக்கிக் கொண்டால் உடனே தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவுடன், சயனைட் வில்லைகள் இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தன.
கைது செய்யப்பட்டதும், இருவரும் தற்கொலை செய்துகொள்ள முயன்றதில், தந்தையாக வந்த உளவாளி உயிரை விட்டார். இவர் தப்பித்துக் கொண்டார்.
அதையடுத்து, தென் கொரியாவில் வழக்கு நடந்து இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதன்பின் தென் கொரிய அரசு, “இவர் வட கொரிய அரசு உத்தரவால் நாச வேலை செய்தாரே தவிர, சொந்தமாக திட்டமிட்டு செய்யவில்லை” என்ற கோணத்தில், இவருக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்தது.
தற்போது தென் கொரியாவில் திருமணம் செய்து, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக வசித்துவரும் இவரது பேட்டியை பிளாஷ் பண்ண வைத்து, முன்பு வட கொரியா செய்த நாச வேலைகளை மீண்டும் ஞாபகப் படுத்துகிறது தென் கொரியா!
இவர் தனது பேட்டியின் இறுதியில், “வட கொரியா உளவாளிகள் எப்போது என்னை தேடி வருவார்களோ என்ற பயத்துடன் தென் கொரியாவில் வாழ்கிறேன்” என்றும் கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக