ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

பேச்சு சுதந்திரத்தை கொஞ்சமாவது அனுபவித்த தருணங்கள் எல்லாம் கலைஞரை திட்டிய போது கிடைத்தவையே

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் கலைஞர் கருணாநிதியை வாயில் வந்த
படியெல்லாம் திட்டி திட்டி தங்கள்  அரசியல் வறுமையையும் வெறுமையையும்  போக்கிகொண்டோர் பட்டியல் மிகவும் பெரிது , 
யாரும் அவரை எப்படியும் திட்டலாம்   அதிலும் இந்த புலி ஆதரவு கூட்டம் இருகிறதே!  தங்களுக்கு  எள்ளளவும் கிடைக்காத சுதந்திரம் என்பதை கொஞ்சமாவது ரசித்து அனுபவித்த தருணங்கள் எல்லாம் கலைஞரை திட்டியபோது கிடைக்க பெற்றவையே .
சுய சிந்தனை நூறு வீதமும் மறுக்கப்பட்ட பிரபாகரனின் பக்தர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட  ஏரியாவில் தானே கடை விரிக்க முடியும்?.
MGR க்கு கலைஞர் எதிரி MGR இன் பணமும் இதர சலுகைகளும் புலிகளுக்கு தேவை கலைஞரை எப்போதும் திட்டி கொண்டே இருக்காவிட்டால் MGR க்கு  சந்தேகம் வந்து விடும் எனவே கலைஞர் வசவை தங்கள் தாரக மந்திரமாகவே வைத்திருந்தார்கள் புலிகளின்

அந்த புலி பய நோய் அப்படியே ஜெயலலிதா மீதான பயப்பிராந்தியாக மாறியது 
ஒரு  தமிழ் துன்பியல்  அங்கதம் அரங்கேறி ,   தற்போது ஜெயா வின் அடிமட்ட ஆதரவு   வேஷதாரி  வரை  விரிவடைந்துள்ளது
இந்த வசவு அரசியலில் வைகோ நெடுமாறன்  கம்யுனிஸ்டு பாண்டியன் மற்றும் சீமான் போன்ற கூத்து கூட்டம் எல்லாம் விளம்பரம் கிடைக்கவும் அதன் மூலம் ஆதாயம் பெறவும்  இந்த கலைஞர் வசவு  மாசாலாவையே பாவம் நம்பி இருக்கிறார்கள்
அரசியல் என்றாலே  ஏதோ கலைஞர் வசவுதான் செல்லுபடியாகும் என்ற தப்பான பாடத்தை பயின்ற  இவர்கள் ஒரு வகை மனநோயாளிகளாகும்

இந்த ஜெயா ஜால்ரா பஜனை குழு கலைஞரை வசை பாடாத நாளே இல்லை புலிமீதும் ஜெயாமீதும் அவ்வளவு பயம் ,
கலைஞரை தாக்குவதில் ஒரு  சௌகரியம் இருக்கிறது.
நாளை கலைஞர் பதவிக்கு வந்துவிட்டாலும் அவர் பழிவாங்க மாட்டார் பாருங்க,
ஜெயாவும் பிரபாவும் பழிவாங்குவதில்   அவுரங்க சீப் கெட்டான் போங்கள்
இந்த பயப்பிராந்தி வசவு நோய் ஒரு நாள் பட்ட நோய் இலகுவில் குணமாகாது
ஆனாலும் எந்த நோய்க்கும் ஏதாவது ஒரு மருந்து இருக்கும் அது இயற்கை விதி .

இந்த கலைஞர்  வசவு கூட்டாளிகள்  இன்னும் தூக்கத்தில் இருந்து  கண்விழிக்க வில்லை  இப்போதும் கூட அடிக்கடி  ஏதோ துர்சொப்பனம் கண்டவர்கள் போல  புலி பயம் வரப்பெற்று திடீர் திடீர் என்று  கலைஞரை சம்பந்தா சம்பந்தமில்லாமல்  வசை பாட தொடங்கி விடிகிறார்கள் 

இந்த பிரபாகரனை பற்றிய பயபிராந்தி தற்போது 
ஜெயலலிதாவை நினைக்கும் போதெல்லாம் வந்து விடுகிறது
 நாம் இவர்களின் நோயின் தன்மையை தெரிந்து கொண்டுள்ளோம்

 பயத்தால் கால்கள் நடுங்குகிறதா உடனே கலைஞரை என்ன வார்த்தை சொல்லியும் திட்டு எத்தனை பொய்கள் சொல்லி திட்ட முடியுமோ திட்டு அதுதான் அப்போது உனக்கு ஒரு ஒட்சிசன் என்பதை மறந்து விடாதே
தமிழ் நாட்டில் யாரும் எவரும் எந்த நாயும் பூனையும் எவ்வளவு கேவலமாகவும் திட்டி தங்கள் சொரியளுக்கு சுகம் தேட முடியுமோ அவ்வளவும் தேடலாம்
கலைஞர் பதிலுக்கு உங்களை நோகடிக்க மாட்டார்  மீண்டும் தேவைப்பட்டால் மன்னித்து சேர்த்தும் கொள்வார் ஏனெனில் அவர் ஒரு மனிதர்
புலிகளின் சகல அடிபொடிகளுக்கும்  மிகவும் சுதந்திரமாக யாருக்கும் பயபடாமல் அரசியல் கருத்துக்களை அள்ளிவீச ஆசை.
அவர்களுக்கு அய்யா கலைஞரை விட்டால் யார் இருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக