வெள்ளி, 26 ஏப்ரல், 2013

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் ! கருத்து கணிப்பு

கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும் என, தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில், மொத்தமுள்ள, 224சட்டசபை தொகுதிக்கான தேர்தல், மே, 5ல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தனியார் டிவிஒன்று, கர்நாடகாவில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:கர்நாடகாவில், நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், தற்போதுஆட்சியில் உள்ள பா.ஜ., கட்சி, 39 முதல் 49தொகுதிகளில் மட்டுமேவெற்றி பெறும். இக்கட்சிக்கு, 23 சதவீத ஓட்டுகள் கிடைக்கும்.
அதே நேரத்தில், காங்கிரஸ், 117 முதல் 129 தொகுதிகளில் வெற்றி பெற்று, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கும். தற்போதைய, சட்டசபையில், காங்., உறுப்பினர்களின் எண்ணிக்கை, 71.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின், மதசார்பற்ற ஜனதா தளம், 34 முதல் 44தொகுதிகளில் வெற்றி பெறும். முன்னாள் முதல்வர், எடியூரப்பாவின், கர்நாடக ஜனதா கட்சிக்கு, 14 முதல் 22 தொகுதிகள் கிடைக்கலாம்.கர்நாடக மக்கள் யாரை முதல்வராக தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள் என்ற கேள்விக்கு, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமிக்கு, 15 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எடியூரப்பாவிற்கு, 10 சதவீதத்தினரும், காங்., தலைவர் சித்தராமையாவிற்கு, 9 சதவீதத்தினரும், எஸ்.எம்.கிருஷ்ணாவிற்கு, 8 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தற்போதைய முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக வரவேண்டும் என, 6 சதவீதம் பேர் ஆதரவுதெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக