வெள்ளி, 26 ஏப்ரல், 2013

வயதான காலத்தில் 2 வது திருமணம் தப்பா?

ஆண்களுக்கு தள்ளாத வயதில்தான் பெண் துணை அதிகம் தேவைப்படும். கவனிக்க ஆள் இல்லையே என்ற கவலையும் அதிகமாக இருக்கும். அதனால்தான் மனைவியை இழந்த கணவர்கள் அடுத்த சில ஆண்டுகளிலேயே கவனிப்பாரின்றி இறந்து விடுவார்கள். 60 வயதான ஒருவர் இரண்டாவது திருமணம் செய்ய விளம்பரம் செய்துள்ளார். அவரை கூப்பிட்டு அனுப்பி அடித்து நகையை பறித்துள்ளது ஒரு கும்பல்.சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் தங்கரத்தினம். ஓய்வு பெற்ற பேராசிரியர். இவரது மனைவி சில ஆண்டு முன்பு காலமானார். பிள்ளைகள் இல்லை. கவனிக்க யாரும் இல்லாமல் அவதிப்பட்ட தங்கரத்தினம், நாளிதழ் ஒன்றில் 2வது திருமணம் செய்ய பெண் தேவை என விளம்பரம் கொடுத்தார். இதை பார்த்து, ஒரு இளம்பெண் தங்கரத்தினத்தை தொடர்பு கொண்டு, எனக்கு 25 வயது ஆகிறது. உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அம்பத்தூருக்கு வாருங்கள் என கூறியுள்ளார். தங்கரத்தினம் அம்பத்தூர் வந்தார். அந்த பெண் அவரை ஒரு ஆட்டோவில் கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அவரும், அவரது கணவன் மற்றும் 2 பேரும் சேர்ந்து தங்கரத்தினத்தை, இந்த வயதில் உனக்கு 2வது திருமணம் கேட்கிறதா என கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்து கொண்டு யாரிடமாவது இதை தெரிவித்தால் கொலை செய்து விடுவோம் என கூறி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தங்கரத்தினம் புகார் செய்தார். அம்பத்தூர் போலீசார் விசாரித்தனர். தங்கரத்தினத்தை தாக்கி நகையை பறித்தது அயனாவரத்தை சேர்ந்த நிக்கோலா, அவரது கணவன் வில்லியம், ரேகா, முத்துக்குமார் ஆகியோர் என தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 5 சவரன் நகை மீட்கப்பட்டது.

பெண் துணை என்பது சுகத்துக்கு மட்டுமல்ல. அதிலும் வயதான காலத்தில் தேவைப்படும் பெண் துணை அதையெல்லாம் தாண்டியது. இந்த வயதில் இரண்டாவது திருமணம் தேவையா என கேலி செய்வது அறியாமை. மனைவியை தனியாக அனுப்பி ஆட்டோவில் ஒருவரை அழைத்து வந்து அவரை தாக்கி கொள்ளையடிப்பது தப்பில்லையாம். ஆனால் இரண்டாவது திருமணம் தப்பு என நினைக்கிறார்கள். இவர்களை யார் திருத்துவது?

1 கருத்து:

  1. நல்ல பதிவு சற்று ஆய்வு இருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும் .
    இதையும் படியுங்கள்.http://zubairsiraji.com/?p=601

    பதிலளிநீக்கு