வெள்ளி, 26 ஏப்ரல், 2013

சிபிஐ நடவடிக்கையில் மத்திய அரசு தலையீடு நிருபணம் ! சட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும்

புதுடில்லி: சி.பி.ஐ., எடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தலையிடுவதாக
தொடர்ந்து எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருவது இன்று நிரூபணமாகி இருப்பதாக சி.பி.ஐ., டைரக்டர் மூலமே வெளியாகி இருப்பதால் பிரதமரும். சட்ட அமைச்சரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ., மற்றும் இடதுசாரி உள்ளிட்ட எதிர்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
நிலக்கரி சுரங்க விவகாரத்தில் சி.பி.ஐ., கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு விவர அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை மத்திய அரசு திருத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக தங்கள் தரப்பு விவரத்தை அபிடவிட்டாக தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது. இன்று சி.பி.ஐ., டைரக்டர் ரஞ்சித்சின்கா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதில் எங்களின் அறிக்கை விவரம் சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இதனை அவர் பார்த்தார் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து எதிர்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரதாப் ரூடி கூறியதாவது: நாங்கள் ஆரம்பம் முதலே சி.பி.ஐ., அதிகாரத்தில், மத்திய அரசு தலையிட்டு வருகிறது என்று கூறி வருகிறோம். இது இப்போது நிரூபணமாகியுள்ளது. பிரதமரை காப்பாற்ற முயற்சி நடந்துள்ளது. எனவே சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரும், பிரதமரும் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் அவசர ஆலோசனை: @@இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் சக அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக