வெள்ளி, 5 ஏப்ரல், 2013

டில்லி மாணவி பலாத்கார கைதி, ‘கை உடைக்கப்பட்ட’ நிலையில் கோர்ட்டில் ஆஜர்

டில்லி மாணவி பலாத்கார வழக்கில் தொடர்புடைய கைதி வினய் சர்மா இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டபோது அவரது கை, அடித்து உடைக்கப்பட்டிருந்தது.
புதுடெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணை சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் கடந்த மாதம் திகார் சிறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு கைதியான வினய் சர்மாவினை போலீசார் மற்றும் சக கைதிகள் தாக்கி, கையை உடைத்தனர் என்று அவரது வக்கீல் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.
“வினய் இந்திய விமானப்படையில் இணைந்து கொள்வதற்கான தகுதி தேர்வு எழுதுவதற்காக ஜாமீன் பெற மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், தேர்வு எழுத முடியாமல் வினய்யின் வலது கை உடைக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து வினய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்” என்று கோர்ட்டுக்கு வெளியே பேசிய வக்கீல் ஏ.பி.சிங், தெரிவித்தார்
viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக