வெள்ளி, 5 ஏப்ரல், 2013

காஞ்சி சங்கர ராமன் கொலை வழக்கு: வாதங்கள் நிறைவு

தமிழ்நாட்டை உலுக்கிய காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் வாதங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் வழக்கு ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஏகப்பட்ட சாட்சிகள் பல்டி அடித்துள்ள நிலையில் இதன் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது பெரிய சஸ்பென்சாக உள்ளது.காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை, புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களின் வாதமும், அரசு சிறப்பு வழக்கறிஞரின் பதில் வாதமும் நிறைவு பெற்றது.இந்த வழக்கில், அப்ரூவராக இருந்த ரவி சுப்ரமணியம், பல்டி அடித்து விட்டதால், வழக்கில் அவரை குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என, அரசு சிறப்பு வழக்கறிஞர் தேவதாஸ் தாக்கல் செய்துள்ள மனு மட்டும், நிலுவையில் உள்ளது. அப்ரூவர் ரவி சுப்ரமணியம் கடந்த 8 ஆண்டுகளாக சிறையில் உள்ளதால், அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று, ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணையும் நிலுவையில் உள்ளது.சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சென்னையைச் சேர்ந்த கதிரவன், கடந்த 21ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.நீதிபதி முருகன் முன்னிலையில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. விஜயேந்திரர், சுந்தரேசன், ரகு உள்ளிட்ட 13 பேர் ஆஜராகியிருந்தனர். ஜெயேந்திரர், அப்பு உள்ளிட்ட 10 பேர் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணையின்போது, அரசு சிறப்பு வழக்கறிஞர் தேவதாஸ், கதிரவன் கொலை செய்யப்பட்டதற்கான இறப்பு சான்றிதழ் மற்றும் கொலைக்கான முதல் தகவல் அறிக்கையின் நகல் உள்ளிட்ட ஆவணங்களை நீதிபதியிடம் தாக்கல் செய்து, கதிரவன் மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் காலாவதியாகிவிட்டதாக தெரிவித்தார்.குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வைத்தியநாதன், சிவக்குமார் ஆகியோர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் அனைத்து விவாதமும் முடிந்துவிட்டதாக' தெரிவித்தனர். அப்ரூவர் ரவி சுப்ரமணியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், திருநாவுக்கரசு, "சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பு வந்த பின், ரவி சுப்ரமணியத்தை குற்றவாளியாக அறிவிக்க கோரும் மனு மீது முடிவு எடுக்க வேண்டும்' என்று வாதிட்டார். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் தேவதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அரசு மற்றும் எதிர் தரப்பு சார்பில், தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை, எழுத்துப்பூர்வமாக கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும், என்று கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை, வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தார http://tamil.webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக