வெள்ளி, 1 மார்ச், 2013

Solar மின் தகடுகள் பொருத்த உத்தரவு : அரசு கட்டிடங்களுக்கும் புதிய விதிகள்

சென்னை: புதிதாக கட்டப்படும் அரசு கட்டிடங்களில் சூரிய மின் சக்தி தகடுகள் பொருத்த வேண்டும். தேசிய கட்டிட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதிமுறைகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தனியார் கட்டிடங்கள், திருமண மண்டபங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வந்ததை அடுத்து, இப்போது அரசு துறைக்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டும் போது கடைபிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது: கேல்வி நிறுவனம் அல்லது அரசு துறைக்கான பல அடுக்குமாடி கட்டிடம் கட்டும் போது  ஊரகமைப்பு துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல், வனத்துறை போன்ற சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதி பெற வேண்டும். பூகம்பம், நில நடுக்கம் போன்றவற்றை எதிர்கொள்ளும் வகையில் கட்டிடங்கள் கட்ட வேண்டும்.  «என்.பி.சி.  2005 விதிகளின்படி (இந்தியன் பில்டிங் கோட்) கட்டிடங்கள் அமைதல் வேண்டும். கேட்டிடத்தின் முகப்பிலும், லிப்ட் பகுதியிலும் மாற்று திறனாளிகள் எளிதில் பயணம் செய்யும் வகையில் சாய்தளம் அமைதல் வேண்டும். தேவையான பார்க்கிங் வசதி, கழிவறை, கழிவு நீரை வெளியேற்றும் வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி இருத்தல் வேண்டும். தீயணைப்பு துறையில் இருந்து நோ  அப்ஜெக்ஷன் சான்று, தீத்தடுப்பு சாதனைகள் இடம் பெற வேண்டும். மேழை நீர் சேகரிப்பு அமைப்புகள் கட்டாயம் இருத்தல் வேண்டும்.


கேட்டிடங்களில் அரசாணை 112ன் கீழ் கட்டாயமாக சூரிய சக்தி மின் தகடுகள் பொருத்தி, மின்சாரம் உற்பத்தி, சேமித்தல் வசதிகள் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு தளத்தின் உயரமும் 3 மீட்டருக்கு குறைய கூடாது. அவசர காலங்களில் வெளியேறுவதற்கான வழிகள் இருத்தல் வேண்டும். நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டிடத்தை இடிக்க வேண்டிய நிலை வராது என்பதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு தடையில்லா சான்று பெற வேண்டும். தேவையான, பாதுகாப்பான மின் வசதிகள் ஏற்படுத்த வேண்டும். கேழிவு நீரை சுத்திகரிக்கும் அமைப்பு இருத்தல் வேண்டும். கேட்டிடத்துக்கு தேவையான தண்ணீர் வசதிக்கு ஆவண செய்தல் வேண்டும். இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக