வியாழன், 28 பிப்ரவரி, 2013

குமுதம் சஞ்சிகைக்கு நீதிமன்ற தடை: நடிகை லட்சுமி ராய் பற்றி வாய் திறக்க கூடாது

சமீப காலமாக குமுதம் குரூப்புக்கு நேரம் சரியில்லையா? (அல்லது, பப்ளிசிட்டியால் சர்க்குலேஷன் பிய்த்துக்கொண்டு ஓடுகிறதா) என்று தெரியவில்லை, சர்ச்சை மேல் சர்ச்சையாக உள்ளது.
இறுதியில் விவகாரம் நீதிமன்றம் போய், தடை வாங்கும் அளவுக்கு சென்றிருக்கிறது.

குஷ்பு – கலைஞர் விவகாரத்தில், குமுதம் அலுவலக வாசலில் ஆர்ப்பாட்டம் எல்லாம் நடந்து முடிந்து சுமுகமாக நேரத்தில், கையில் குமுதம் சஞ்சிகையுடன் கோர்ட்டுக்கு போயிருக்கிறார் நடிகை லட்சுமிராய்.
தற்போது ‘ஒன்பதுல குரு’ படத்தில் நடிக்கும் நடிகை லட்சுமிராய் சொன்னதாகக் கூறி, குமுதம் ஒரு பேட்டியை வெளியிட்டிருந்தது. அதில் ஒரே அறையில் ஹீரோவுடன் ஹீரோயின் தங்கினால் தவறில்லை என்று லட்சுமி ராய் சொன்னதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுதான், விவகாரம்.
நடிகை லட்சுமி ராய், நான் அப்படி சொல்லவே இல்லை என்கிறார். அதற்கு மறுப்பு அறிக்கை அனுப்பவில்லை. வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் லட்சுமிராய், “நான் சொல்லாத ஒன்றை குமுதம் தவறாக வெளிட்டிருக்கிறது. இதற்காக அந்தப் பத்திரிகை மன்னிப்பு கேட்க வேண்டும். இனி என்னைப் பற்றி அந்தப் பத்திரிகை எதுவும் எழுதக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, “குமுதம் பத்திரிகை லட்சுமிராயைப் பற்றிய செய்திகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது” என்று தீர்ப்பு வழங்கினார்.
இனி, ‘ஒன்பதுல குரு’ படம் பற்றி செய்தி வெளியிட்டாலும், “ஒரு அம்மையார் நடிக்கும்…” என்றுதான் எழுத வேண்டியிருக்கும்.  viruviruppu,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக