வெள்ளி, 1 மார்ச், 2013

17 போலீசாரை தலிபான்கள் சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடூரமா கொன்றனர்

 Taliban insurgents poisoned and then shot to death 17 people in an overnight attack on a government-backed militia post in eastern Afghanistan, an official said Wednesday
Kabul ஆப்கானிஸ்தானில் 17 போலீசாரை தலிபான்கள் கொடூரமான முறையில் கொன்றனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள காஜ்னி மாகாணம் தலிபான் மற்றும் அல்கய்தா தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதி. இங்குள்ள போலீஸ் முகாம் ஒன்றில் 2 தலிபான் தீவிரவாதிகள் போலீஸ் வேடத்தில் ஊடுருவினர். நேற்று முன்தினம் இரவு போலீசார் சாப்பிடும் சாப்பாட்டில் 2 தீவிரவாதிகளும் மயக்க மருந்து கலந்தனர். மருந்து கலந்த சாப்பாட்டை 17 போலீசார் சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் மயங்கியதும் 2 தீவிரவாதிகளும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு 17 பேரையும் கொன்றனர்.


இதற்கிடையில், போலீஸ் வேடத்தில் தீவிரவாதிகள் ஊடுருவிய தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, முகாமை சுற்றிலும் பாதுகாப்பு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. தப்ப முயன்ற 2 தீவிரவாதிகளையும் சுற்றிவளைத்து கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே தலைநகர் காபூலில் நேற்று ராணுவத்தினர் சென்ற பஸ்சை குறிவைத்து தற்கொலை படை தீவிரவாதி தாக்குதல் நடத்தினான். இதில் பஸ் சேதமடைந்தது. 6 ராணுவ வீரர்கள், பொதுமக்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர். தலிபான் தீவிரவாதிகளின் இந்த தாக்குதல்களுக்கு ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். - tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக